Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 வீரர்களை நீக்கியது ஏன்? கோலி எடுத்த எதிர்பார்க்க முடியாத முடிவு.. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?

சிட்னி: இந்திய அணியில் தற்போது 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி ஆடும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்று இந்தியா இழந்துள்ளது.

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பெரா மைதானத்தில் நடக்கிறது.

டாஸ்

டாஸ்

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்று ஆடும் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மயங்க், சைனி, சாஹல், சமி ஆகியோர் அணியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளனர்.

காரணம்

காரணம்

கடந்த இரண்டு போட்டிகளில் ஓப்பனராக இறங்கிய மயங்க் அவசரப்பட்டு ஆடி மோசமாக சொதப்பினார். இவர் இரண்டு போட்டியிலும் 40 ரன்களை கூட எடுக்கவில்லை. இதன் காரணமாக மயங்கை நீக்கிவிட்டு சுப்மான் கில்லிற்கு கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல் அணியில் இருந்து சாஹல் நீக்கப்பட்டுள்ளார்.

சாஹல் நீக்கம்

சாஹல் நீக்கம்

சாஹல் கடந்த இரண்டு போட்டிகளாக சரியாக விக்கெட் எடுக்கவில்லை. அதிக அளவில் ரன் கொடுத்தார். இதன் காரணமாக இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ் அணிக்குள் வந்துள்ளார். அதேபோல் ஷமியும் நீக்கப்பட்டுள்ளார். இவர் முழு பிட்னஸில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

 பவுலிங் செய்தார்

பவுலிங் செய்தார்

கடந்த இரண்டு போட்டியில் கொஞ்சம் சுமாராகவே இவர் பவுலிங் செய்தார். ஆனாலும் இவர் நீக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் இவருக்கு பதிலாக ஷரத்துல் தாகூர் அணிக்குள் வந்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளாக மோசமாக சொதப்பிய சைனி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நடராஜன் அணிக்குள் வந்துள்ளார்.

 அணி வீரர்

அணி வீரர்

இது தொடர்பாக இன்று கோலி இந்திய அணி வீரர்களிடம் பேசி உள்ளார். அணிக்குள் என்ன செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து டிரெஸ்ஸிங் ரூமில் கோலி கலந்தாலோசித்து உள்ளார். அணியின் நிலவரத்தையும், வீரர்களின் பார்மையும் உணர்ந்து கோலி முடிவுகளை எடுத்து இருக்கிறார். இன்று ஆடும் இந்திய அணியில் சுப்மான் கில், தவான், கோலி, ஷ்ரேயாஸ், ராகுல், பாண்டியா, ஜடேஜா, நடராஜன், ஷரத்துள் தாகூர், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Story first published: Wednesday, December 2, 2020, 22:29 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+