Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை ஏன் தேவையின்றி நீக்கினீர்கள்.. இந்திய அணியில் ஷாக்கிங் மாற்றம்.. யார் இந்த முடிவை எடுத்தது?

சிட்னி: இந்திய அணியில் நன்றாக பவுலிங் செய்து வந்த ஷமி திடீரென நீக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மண்ணை கவ்வி உள்ளது. கடைசியாக நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்தில் இந்திய அணி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் நன்றாக பவுலிங் செய்து வந்த ஷமி திடீரென நீக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியில் இன்று ஷமிக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் அணிக்குள் வந்துள்ளார். பும்ரா எப்போதும் போல அணியில் நீடிப்ப்பார்.

மோசம்

மோசம்

இந்த தொடரில் இந்திய அணியின் பவுலிங் மோசமாக சொதப்பி வந்தது. முக்கியமாக பும்ரா, சாஹல் இருவரும் விக்கெட் எடுக்க கஷ்டப்பட்டனர். அதிக அளவு ரன்களை இவர்கள் இருவரும் விட்டுக்கொடுத்தனர். முக்கியமாக பார்ம் இன்றி பும்ரா மோசமாக திணறி வருகிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஷமி இரண்டு போட்டியிலும் நன்றாக பவுலிங் செய்தார். தேவையான நேரங்களில் விக்கெட் எடுத்தார். ;பார்ம் இன் அவுட் ஏ என்றுதான் பவுலிங் செய்து வந்தார். பெரிய அளவில் மைதானத்தில் இவர் சொதப்பவில்லை. ரன்னும் அதிகமாக கொடுக்கவில்லை.

நீக்கம்

நீக்கம்

ஆனால் இவரை நீக்கிவிட்டு இன்று ஷரத்துல் தாகூருக்கு கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார். பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக கோலி இவருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் ஷமி நீக்கப்பட்டது ஏன் என்று இன்னும் தெரியவில்லை. இது போன்ற தவறான முடிவுகளை எடுப்பது யார் என்றும் இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கோலியின் முடிவு

கோலியின் முடிவு

கோலியின் இந்த முடிவு இன்று விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் ஷமி, நடராஜன், பும்ரா ஆகியோர் களமிறங்கி இருந்தால் அது பெரிய திருப்பமாக இருந்து இருக்கும். ஆனால் கோலி ஏனோ ஷமியை நீக்கிவிட்டு ஷரத்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்.

Story first published: Wednesday, December 2, 2020, 10:09 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+