Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் இப்போது வேண்டாம்.. வேண்டுமென்றே நடராஜனை ஓரம் கட்டிய கோலி.. பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம்

சிட்னி: இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் நடராஜன் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருந்த காரணத்தால், அடுத்தடுத்த 2 ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

இந்திய அணியில் நடராஜன், சாகர் போன்ற வீரர்கள் இருந்தும் கூட சைனி போன்ற வீரர்கள் ஆடும் அணியில் இடம்பிடிப்பதால் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடைந்து வருகிறது.

எப்படி

எப்படி

இந்திய அணியில் நடராஜன் தற்போது டி 20 மற்றும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி 20 அணியில் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் நடராஜன் சேர்க்கப்பட்டார். அதன்பின் சைனி காயம் காரணமாக நடராஜன் ஒருநாள் அணிக்குள்ளும் வந்தார். ஆனாலும் சைனி காயம் சரியான நிலையில், ஆடும் ஒருநாள் அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மோசம்

மோசம்

ஆடும் அணியில் நடராஜன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். முதல் போட்டியில் சைனி சரியாக பவுலிங் செய்யவில்லை. இதனால் இரண்டாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு நடராஜன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியிலும் நடராஜன் சேர்க்கப்படவில்லை. இரண்டாவது போட்டியிலும் சைனி மோசமாக பவுலிங் செய்தார்.

பவுலிங்

பவுலிங்

இவரின் மோசமான பவுலிங் காரணமாக இவர் 6 ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது. மற்ற ஓவர்களில் மயங்க், ஹர்திக் பாண்டியாவை வைத்து இந்திய அணி நேற்று கொஞ்சம் சமாளித்தது. இந்த நிலையில்தான் இவ்வளவு மோசமாக பவுலிங் செய்யும் சைனியை அணியில் எடுத்து நடராஜனை புறக்கணிப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. சைனியை கோலி வளர்ந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.

பும்ரா

பும்ரா

பும்ராவை ரோஹித் வளர்த்து கொண்டு வந்தது போல பெங்களூர் பவுலர் சைனியை வளர்த்து கொண்டு வர நினைக்கிறார். இதனால்தான் அவர் மோசமாக பவுலிங் செய்தாலும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி அவரை ஊக்குவிக்கிறார். நடராஜன் இந்திய அணிக்குள் இப்போதுதான் வந்துள்ளார்.

இப்போது வேண்டாம்

இப்போது வேண்டாம்

எதிர்காலத்தில் ஷமி இடம் காலியாகும் சமயத்தில் இந்திய அணியில் நடராஜன் நிரந்தரமாக இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணிக்குள் நடராஜன் இப்போது வேண்டாம். இன்னும் கொஞ்சம் வலைப்பயிற்சி எடுக்கட்டும் என்று அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. சைனி ஆர்சிபி வீரர் என்பதால் கோலி அவருக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்.

வருவார்

வருவார்

ஆனால் சைனி தற்போது ஆடும் விதத்தை பார்த்தால் அடுத்த போட்டியில் இடம்பெற மாட்டார் என்கிறார்கள். அடுத்த போட்டியில் எப்படியும் சைனி ஆட மாட்டார். அவருக்கு பதிலாக நடராஜன் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, November 30, 2020, 16:00 [IST]
Other articles published on Nov 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+