Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை போய் உட்கார வைத்துவிட்டோமே.. நெட் பயிற்சியில் அதிர வைத்த நட்டு.. பிசிசிஐ எடுக்க போகும் அஸ்திரம்

சிட்னி: வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசி வரும் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணி நிர்வாகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.

இந்தியாவின் டி 20 மற்றும் ஒருநாள் அணியில் நடராஜன் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். டி 20 அணியில் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் நடராஜன் அணிக்குள் வந்தார்.

அதன்பின் சைனி காயம் காரணமாக அவதிப்பட்டதால், நடராஜன் ஒருநாள் அணிக்குள்ளும் வந்தார். ஆனாலும் சைனி காயம் சரியான நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதனால் ஆடும் ஒருநாள் அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்திய அணியில் நடராஜனுக்கு பதிலாக சைனி வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால் சைனி பெரிய அளவில் நன்றாக பவுலிங் செய்வது இல்லை. சைனி போடும் பவுலிங்கை ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக துவம்சம் செய்கிறார்கள்.

இரண்டு போட்டி

இரண்டு போட்டி

இவர் விளையாடிய இரண்டு போட்டியிலும் ஓவருக்கு 9 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் கொடுத்தார். இரண்டு போட்டியிலும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். சைனியின் பவுலிங் இப்படி இருக்கையில் இன்னொரு பக்கம் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசி வரும் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணி நிர்வாகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.

சிறப்பு

சிறப்பு

தமிழக வீரர் நடராஜன் வலைப்பயிற்சியில் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். சைனியை விட இவரின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. யார்க்கர் மட்டுமின்றி, துல்லியமாக பவுன்சர் பந்துகளையும் போடுகிறார். அதேபோல் இவரின் பவுலிங் நன்றாக ஸ்விங் ஆகவும் தொடங்கி உள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

இவர் நிறைய வேரியேஷன்களை கொண்டு இருக்கிறார். இவரின் பவுலிங்கை பார்த்து இந்திய அணி நிர்வாகம் பெரிய அளவில் இவர் மீது நம்பிக்கை வைக்க தொடங்கி உள்ளது. எதிர்பார்த்ததை விட நடராஜன் சிறப்பாக பந்து வீசுகிறார். சைனிக்கு பதிலாக நடராஜனை ஆடும் அணியில் எடுக்க வேண்டும் என்று பிசிசிஐ ஆலோசனைகளை செய்து வருகிறது.

பும்ரா

பும்ரா

நடராஜன் களமிறங்கினால் பும்ராவிற்கு உறுதுணையாக இருப்பார். நடராஜன், பும்ரா, ஷமி என்ற இணை பவுலிங் செய்தால் ஆட்டமே வேறு மாதிரி இருக்கும் என்று பிசிசிஐ நிர்வாகிகள் கருதுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், பும்ரா, ஷமி, ஷைனி ஆகிய மூவருமே, வலது கை பந்து வீச்சாளர்கள். என்னதான் இவர்கள் திறமையான பவுலர்களாக இருந்தாலும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணிக்குள் இருந்தால், பந்து வீச்சில் 'வரைட்டி' கிடைக்கும். பேட்ஸ்மேன்களை குழப்ப உதவும். எனவே, நடராஜனை உட்கார வைத்தது தவறு என்று இந்திய அணி நிர்வாகத்திற்கு ரசிகர்கள் பலரும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Story first published: Tuesday, December 1, 2020, 12:27 [IST]
Other articles published on Dec 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+