Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொளேர் அடி.. மைதானத்தில் கலங்கி விழுந்த ஆஸி.யின் நம்பிக்கை.. இந்திய இளம் வீரரின் பவுன்சர்.. வீடியோ!

சிட்னி: ஆஸ்திரேலிய அணி பெரிதும் நம்பி இருந்த இளம் வீரர் வில் புக்கோவ்ஸ்கி தற்போது அந்த அணியின் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் திருவிழா போல நடந்து வருகிறது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என்று மிக நீண்ட தொடர் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடந்து வருகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் இரண்டு நாட்டு ஏ அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.

எப்படி

இரண்டு நாட்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டம் போல இந்த போட்டி நடைபெற்றது. இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் இந்த ஏ அணியில் இடம்பெற்று இருந்தனர். இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய ஏ அணி 247/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆஸ்திரேலிய ஏ அணி 306/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

பின் இந்திய ஏ அணி 189/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி 52/1 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் டை ஆனது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் வில் புக்கோவ்ஸ்கி தலையில் அடிபட்டு பாதி போட்டியில் வெளியேறினார். இந்திய அணியின் இளம் வீரர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சர் பந்தில் இந்த சம்பவம் நடந்தது.

சுருண்டு விழுந்தார்

சுருண்டு விழுந்தார்

கார்த்திக் தியாகி வீசிய பவுன்சரி பந்தை எதிர்கொள்ள முடியாமல், திணறிய வில் புக்கோவ்ஸ்கி, கீழே குனிந்தார். வேகமாக வந்த பந்து அப்படியே ஹெல்மெட்டில் மோதியது. பந்து பட்ட வேகத்தில் வில் புக்கோவ்ஸ்கி சுருண்டு விழுந்தார். ஸ்டம்பில் இருந்த மைக்கில் பொளேர் என்று சத்தம் கேட்டது.

வெளியேறினார்

வெளியேறினார்

இதனால் அவருக்கு லேசாக தலை கலங்கி இருக்கிறது. இதையடுத்து அவர் பாதி போட்டியில் வெளியேறினார். தற்போது இவர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரில் வார்னர் காயம் காரணமாக அவதிப்படுவதால் வில் புக்கோவ்ஸ்கி அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்த நிலையில் வில் புக்கோவ்ஸ்கியும் காயம் காரணமாக தற்போது வெளியேறி உள்ளார். இவருக்கு 22 வயதுதான் ஆகிறது. ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் இவர் இப்படி அடிக்கடி தலையில் அடி வாங்குவது வழக்கமாகி உள்ளது. கார்த்திக் தியாகி ஓவரில் இவர் தலையில் அடிபட்டு சுருண்டு விழுந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

Story first published: Wednesday, December 9, 2020, 22:36 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+