Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு பெரிய மனுஷன் இப்படி பேசலாமா.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஜாகிர் கான்.. இதெல்லாம் தேவையா சார்?

சிட்னி: இந்திய வீரர்களிடம் ஆக்ரோஷம் இல்லை, ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய வீரர்கள் லேசாக சீண்ட வேண்டும், என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றிபெற்றது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்கள் எடுத்தது. 49.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது.

ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

நட்பு

நட்பு

இந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய - ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே நெருக்கமான நட்பு காணப்பட்டது. பொதுவாக ஆஸ்திரேலிய தொடர்களில் காணப்படும் சண்டை இந்த முறை காணப்படவில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களிடம் ஜாலியாக பேசிக்கொண்டு, கொண்டாட்டமாக ஆடினார்கள்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களிடம் கொஞ்சம் கூட கோபத்தை காட்டவில்லை. இந்திய வீரர்கள் இப்படி கோபம் அடையாமல் இருப்பதுதான் அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

இது குறித்து ஜாகிர் கான் அளித்துள்ள பேட்டியில், இந்திய வீரர்களிடம் ஆக்ரோஷம் இல்லை. ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய வீரர்கள் லேசாக சீண்ட வேண்டும். அப்போதுதான் அந்த கோபம், கனல் ஏற்படும். அப்படி செய்தால் மட்டுமே இந்திய வீரர்களிடம் பழைய ஆக்ரோஷம் திரும்பும். இந்திய வீரர்கள் ஸ்மித் வார்னரிடம் மோதலாம்.

மோசம்

மோசம்

பந்தில் உப்புத்தாள் தேய்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த முறைகேட்டை நினைவு கூர்ந்து மோதலாம். மோசமாக சண்டை போட வேண்டும் என்று அவசியம் இல்லை. சின்ன சின்ன சீண்டல்களை செய்தால் நன்றாக இருக்கும். அப்போதுதான் இந்திய அணி வீரர்களுக்குள் அந்த துடிப்பு உருவாகும். அதுவே இந்தியா வெற்றிபெற வழிவகுக்கும் என்று ஜாகீர் கான் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து

கருத்து

ஆனால் ஜாகீர் கானின் இந்த பேச்சை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். அவர் இப்படி பேசி இருக்க கூடாது. இந்திய ஆஸ்திரேலிய அணிகள் நெருக்கமான அணிகளாகிவிட்டது. இதில் எதற்கு மோதல். சண்டை எல்லாம் உங்கள் காலத்தோடு முடிந்துவிட்டது. ஜாகீர் முன்னணி வீரர் போல பேச வேண்டும்.

விமர்சனம்

விமர்சனம்

இது ஜெண்டில்மேன் கேம்.. இப்படித்தான் நட்பாக ஆட வேண்டும், ஆக்ரோஷத்தை பவுலிங், பேட்டிங்கில் காட்ட வேண்டுமே தவிர எதிர் நாட்டு வீரர்களிடம் இல்லை என்று அறிவுரை வழங்கி உள்ளனர். முக்கியமாக உப்புத்தாள் சர்ச்சை மிகவும் முக்கியமானது. அதை எல்லாம் இப்போது கிளற கூடாது. அப்படி எல்லாம் செய்தால் இந்திய வீரர்களின் மதிப்புதான் குறையும், என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Thursday, December 3, 2020, 13:14 [IST]
Other articles published on Dec 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+