Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 மேட்ச் தோற்ற வெறி.. கத்துக்குட்டி ஓமனை பொளந்த ஆஸ்திரேலியா.. 10 ஓவருக்குள் முடிந்த சேஸிங்

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் 40-வது லீக் போட்டியில் ஓமன் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிய நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா இந்த ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. குரூப் சுற்றில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளான ஆஸ்திரேலியா, தனது கடைசிப் போட்டியில் கௌரவ வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் கத்துக்குட்டி அணியான ஓமனை எதிர்கொண்டது.

AUS vs OMAN Australia Crushes Oman by 9 Wickets After T20 World Cup Exit Mitchell Marsh hit Half-Century

போட்டிக்கு முன்னதாக ஓமன் கேப்டன் ஜதிந்தர் சிங், "ஆஸ்திரேலியாவை நசுக்க இதுவே சரியான நேரம்" என்று அதிரடியாகப் பேசியிருந்தார். ஆனால் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஓமனை நசுக்கி எறிந்தனர். வெறும் 10 ஓவருக்குள் மொத்த சேஸிங்கும் முடிந்தது. மொத்த போட்டியும் 26 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.

ஓமன் பேட்டிங் வரிசை சரிவு

பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஓமன் வீரர் ஆமிர் கலீமை டக் அவுட் செய்து வெளியேற்றினார் சேவியர் பார்ட்லெட். அதனைத் தொடர்ந்து ஓமன் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன.

ஓமன் கேப்டன் ஜதிந்தர் சிங் 17 ரன்களும், வாசிம் அலி 32 ரன்களும் எடுத்து ஓரளவு தாக்குப் பிடித்தனர். மற்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். குறிப்பாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா தனது பந்துவீச்சால் ஓமன் வீரர்களை நிலை குலையச் செய்தார். அவர் 3.2 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கிளென் மேக்ஸ்வெல் மற்றும் சேவியர் பார்ட்லெட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் ஓமன் அணி 16.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ருத்ரதாண்டவம் ஆடிய ஆஸ்திரேலிய பேட்டர்கள்

105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஓமன் பந்துவீச்சாளர்களை ஓட ஓட விரட்டினார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், வெறும் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக ஜோஷ் இங்கிலிஸ் 12 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 108 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

வெற்றி பெற்றும் வெளியேற்றம்

ஓமன் அணிக்கு எதிராக ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு கசப்பான தொடராகவே முடிந்தது. டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு ஆஸ்திரேலிய அணி வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும். மறுபுறம், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் ஓமன் அணி இந்த உலகக்கோப்பையில் இருந்து விடைபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்ற ஆத்திரத்தை ஓமன் அணி மீது காட்டி ஆஸ்திரேலியா ஒருவழியாக இந்தத் தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது. எனினும், முன்னாள் சாம்பியன் அணி லீக் சுற்றோடு வெளியேறுவது ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, February 20, 2026, 22:07 [IST]
Other articles published on Feb 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+