For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு பயம் காட்டிய பாகிஸ்தான்.. நன்றாக விளையாடிய பாபர் அசாம்.. ஒரே பந்தால் மாறிய ஆட்டம்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் திடீரென்று பாகிஸ்தான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடியது. இதனால் பாட் கம்மின்ஸ் படை அதிர்ச்சி அடைந்தது. எனினும் ஹேசல்வுட் வீசிய ஒரே ஸ்பெல்லால் அனைத்தும் மாறியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி , முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 264 ரன்கள் சேர்த்தது.

Aus vs Pak 2nd test - Briliant performance from pakistan made match interesting

இதனையடுத்து, 54 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி,, இரண்டாவது இன்னிங்சில், கடுமையாக தடுமாறியது. பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், முன்வரிசை வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 16 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

எனினும் மிட்செல் மார்ஷ் அபாரமாக விளையாடி 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஸ்மித் அரைசதம் கடக்க, 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாகின் ஆப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அப்துல்லா ஷபிக் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இமார் உல் ஹக் 12 ரன்களில் வெளியேறினார். எனினும் ஷான் மகசூத் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பாகிஸ்தானை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

இதில் ஷான் மகசூர் அதிரடியாக விளையாடிய 7 பவுண்டரிகள் அடித்த நிலையில், இந்த தொடர் முழுவதும் தடுமாறிய பாபர் அசாம், அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக விளையாடிய மகசூத் 71 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

எனினும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய பாபர் அசாம், சல்வுட்டின் அபார பந்தால் போல்ட் ஆனார். இதனையடுத்து சவுத் ஷகில் 24 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 54 ஓவடா முடிவில் 188 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்துள்ளது. இன்னும் பாகிஸ்தான் வெற்றிக்கு 129 ரன்கள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய வெற்றிக்கு 5 விக்கெட் தேவைப்படுகிறது. இதனால், இந்தப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Story first published: Friday, December 29, 2023, 12:04 [IST]
Other articles published on Dec 29, 2023
English summary
Aus vs Pak 2nd test - Briliant performance from pakistan made match interesting ஆஸி.க்கு பயம் காட்டிய பாகிஸ்தான்.. நன்றாக விளையாடிய பாபர் அசாம்.. ஒரே பந்தால் மாறிய ஆட்டம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+