For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடியோ - அடச்சீ! பாகிஸ்தான் விளையாடிய போது காதல் ஜோடி கசமுசா! வசமாக மாட்டி விட்ட கேமராமேன்

மெல்போர்ன் : பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் பாக்ஸிங் டே அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை பாகிஸ்தான் அணி தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 318 ரன்கள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Aus vs Pak 2nd test - Lovers caught by camera man during romance in stadium

இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 264 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 54 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா டக் அவுட்டாகினர். டேவிட் வார்னர் 6 ரன்களிலும் மார்னஸ் லாபஸ்சேன் நான்கு ரன்களிலும் டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வெளியேறினர்.

Aus vs Pak 2nd test - Lovers caught by camera man during romance in stadium

இதனால் ஆஸ்திரேலிய அணி 16 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டியின் போது ஒரு காமெடியான சம்பவமும் நடைபெற்றது. பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஒரு காதல் ஜோடி மைதானத்தில் யாருமே இல்லாத இடத்திற்கு சென்று கசமுசாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதனை கவனித்த கேமராமேன் காதல் ஜோடி பக்கம் கேமராவை திருப்பினார். அப்போது பெரிய ஸ்கிரீனில் காதல் ஜோடி செய்து கொண்டிருந்த விஷயம் தெரிந்தது. அப்போது பார்வையாளர்கள் அனைவரும் கத்தி கூச்சலிட்ட பிறகுதான் தாங்கள் கேமராவில் தெரிகிறோம் என்பதை உணர்ந்த அந்த காதல் ஜோடி திடீரென்று அங்கிருந்து ஓடி விட்டது.

இதை அடுத்து அந்த இளைஞர் தனது முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடி சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. கிரிக்கெட் பார்க்க வந்த இடத்தில் இப்படியெல்லாமா செய்வது என்று ரசிகர்கள் அந்த காதல் ஜோடியை கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, December 28, 2023, 14:46 [IST]
Other articles published on Dec 28, 2023
English summary
Aus vs Pak 2nd test - Lovers caught by camera man during romance in stadium வீடியோ - அடச்சீ! பாகிஸ்தான் விளையாடிய போது காதல் ஜோடி கசமுசா! வசமாக மாட்டி விட்ட கேமராமேன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+