Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs PAK- பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தந்த ஆஸ்திரேலியா.. டி20 தொடரை முழுமையாக வென்று அசத்தல்

ஹாபார்ட் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்த நிலையில், டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஏற்கனவே வென்று விட்டது.

இதனை அடுத்து ஹாபார்ட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய உத் வேகத்தில் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் தேர்வு செய்தது.

pak vs aus babar azam marcus stonis mohammed rizwan

இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபர்கான் 9 ரன்களில் ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய முன்னாள் கேப்டன் பாபர் அசாம், 28 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். ஹஸிபுல்லா 19 பந்துகளில் 24 ரன்கள் சேர்க்க உஸ்மான்கான் மூன்று ரன்களிலும் கேப்டன் சல்மான் ஆகா ஒரு ரன்களிலும் வெளியேறினர்.

இர்பான் கான் 10 ரன்களிலும், அப்பாஸ் ஆப்ரிடி 1 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் ஷாகின் அப்ரிடி 16 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 18 புள்ளி ஒரு ஓவர் முடிவில் 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் அரூண் ஹார்டி அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற விளக்குடன் ஆஸ்திரேலியாவில் களமிறங்கியது.

இதில் தொடக்க வீரர் மேத்தீவ் ஷார்ட் 2 ரன்களில் ஆட்டமிழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜாஸ் இங்கிலீஷ் மற்றும் ஜாக் பிரேசர் ஆகிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 18 ரன்களில் ஜேக் பிரேசர் வெளியே, கேப்டன் ஜாஸ் இங்கிலீஷ் 22 ரன்கள் சேர்த்தார். எனினும் நடுவரிசையில் களம்பிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரரான மார்க்கஸ் ஸ்டோனிஸ் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார்.

5 சிக்சர், 5 பவுண்டு என 27 பந்துகளின் அவர் 61 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றார். டிம் டேவிட் 7 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து இருக்கிறது. ஒரு நாள் தொடரில் இழந்த தோல்விக்கு தற்போது டி20 தொடரின் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய பழி தீர்த்துக் கொண்டுள்ளது.

Story first published: Monday, November 18, 2024, 17:02 [IST]
Other articles published on Nov 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+