Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி டெஸ்ட் தொடர்.. முதல் போட்டியிலேயே டேவிட் வார்னர் மிரட்டல் சம்பவம்.. பரிதாபமான பாகிஸ்தான்!

பெர்த்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 26வது முறையாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடருடன் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடர் வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளதால், இந்த டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடரில் டேவிட் வார்னரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

AUS vs PAK : Australian batter David Warner Scored 41 ball fifty against Pakistan in his last test Series

இந்த நிலையில் பெர்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் - கவாஜா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 9.4 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. ஒரு பக்கம் கவாஜா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டினார் வார்னர். சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் வெறும் 41 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதில் மொத்தமாக 9 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது தான் கூடுதல் சிறப்பாகும்.

அதன்பின் பாகிஸ்தான் அணியின் பவுலர்களை டேவிட் வார்னர் அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினார். அதில் ஷாகின் அப்ரிடியின் பந்தில் டேவிட் வார்னர் அடித்த சிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் பவுண்டரிகளை விளாசி கொண்டே இருந்தார். முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், கவாஜா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த லபுஷேன் 16 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் வார்னர் மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர்.

தொடர்ந்து 125 பந்துகளில் பவுண்டரியுடன் சதம் விளாசிய அவர், தனது ஸ்டைலில் எகிறி குதித்து உற்சாகத்தில் கொண்டாடினார். தனது கடைசி டெஸ்ட் தொடரில் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் டேவிட் வார்னர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 14, 2023, 11:35 [IST]
Other articles published on Dec 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+