Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா.. 2.5 மணி நேரம் பேட்டிங் பயிற்சி.. வேற மாதிரி தயாராகிய நட்சத்திர வீரர்!

பெங்களூரு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் அதிக நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 18வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் எப்போதும் மறைமுகமாக ஒரு ரைவல்ரி இருந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானிடம் மட்டுமே தோல்வியடைந்தது.

AUS vs PAK: Australian Cricketer Steve Smith practices for more than 2.5 hours to get back the batting form

அதேபோல் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து வந்த ஆதிக்கத்தை 2011ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி தான் முடிவுக்கு கொண்டு வந்தது. அதன்பின் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வகாப் ரியாஸ் - ஷேன் வாட்சன் இடையிலான ஸ்பெல்லை எந்த ஆஸ்திரேலிய ரசிகர்களாலும் மறக்கவே முடியாது. இந்த ரைவல்ரி ஒரு பக்கம் இருக்க, நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் உள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் உள்ளிட்டோரில் யாருமே பொறுப்புடன் விளையாடவில்லை. குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் 3 போட்டிகளில் 46, 19 மற்றும் 0 என்று மொத்தமாக 65 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்காக ஸ்டீவ் ஸ்மித் வேற மாதிரி தயாராகியுள்ளது தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த பயிற்சி இரண்டவை மணி நேரம் வரை சென்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஒரு மணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு மற்ற அடிப்படை பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் 2.5 மணி நேரத்திற்கும் அதிகமாக பேட்டிங்கில் மட்டும் பயிற்சி மேற்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, October 20, 2023, 13:53 [IST]
Other articles published on Oct 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+