Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் கூட செய்யாத சாதனை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள்.. சாதித்த ஆஸ்திரேலிய வீரர்!

பெர்த்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது பவுலர் என்ற சாதனையை ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வீரர் நேதன் லயன் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 15வது முறையாக ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

AUS vs PAK : Australian Player Nathan Lyon becomes the 8th Player to get 500 Wickets in Test Cricket History


இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் பாகிஸ்தான் அணியின் ஃபஹீம் அஷ்ரப்பை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் லயன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது வீரர் என்ற சாதனையை லயன் படைத்துள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் ஷேன் வார்னே, மெக்ராத் ஆகியோருக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நேதன் லயன், 501 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிய வகை பவுலிங் ஸ்டைலான ஆஃப் ஸ்பின்னில் மேஜிக் செய்ய கூடிய சில வீரர்களில் நேதன் லயன் ஒருவர்.

ஷேன் வார்னேவின் ஓய்வுக்கு பின் தரமான சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் திண்டாடி கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு, வரமாக வந்தவர் என்றே சொல்ல முடியும். எந்த மைதானம், எந்த சூழல், எந்த அணி என்றாலும் ஆஸ்திரேலியா அணின் பிளேயிங் லெவனில் லயனின் பெயர் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்.

சாதாரண மைதான ஊழியராக இருந்த நேதன் லயன், திடீரென ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்து கற்பனை செய்ய முடியாத சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் நேதன் லயன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். அதேபோல் 12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 17, 2023, 17:28 [IST]
Other articles published on Dec 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+