For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அத்தனை அவமானத்தையும் தூக்கி அடித்தார்.. 3வது முறையாக வார்னரிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்!

Recommended Video

WORLD CUP 2019 | 3வது முறையாக வார்னரிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்!

டாண்டன் : உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் அசத்தல் ஆட்டம் ஆடினார்.

கடந்த ஆண்டு பால் டேம்பரிங் குற்றச்சாட்டில் சிக்கிய வார்னர், அதனால் ஓராண்டு தடையில் இருந்தார். தடையில் இருந்து மீண்ட வார்னர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இணைந்து ஆடி வருகிறார்.

அவமானம்

அவமானம்

வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் பந்து சேத விவகாரத்தில் சிக்கியது முதல் ரசிகர்களால் "ஏமாற்றுக்காரர்கள்" என அவமானப்படுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஓராண்டு தடைக்குப் பின்னும், அவர்களை அவமானப்படுத்தி வருகிறார்கள் சில விஷமி ரசிகர்கள்.

விஷமிகள்

விஷமிகள்

உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஆஸ்திரேலிய அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் ஸ்டீவ் ஸ்மித் - டேவிட் வார்னர் இருவரும் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது விஷமிகள் கோஷம் எழுப்பி வந்தனர்.

சதம் அடித்தார்

சதம் அடித்தார்

என்ன அவமானம் வந்தாலும், சளைக்காமல் ஆடிய டேவிட் வார்னர் இதுவரை நான்கு உலகக்கோப்பை போட்டிகளில் 2 அரைசதம், 1 சதம் அடித்து அசத்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 102 பந்துகளில் சதம் கடந்த வார்னர் 107 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

திறமை நிரூபணம்

திறமை நிரூபணம்

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்காக ஓராண்டு தடையில் இருந்த வார்னர், இந்த சதத்தின் மூலம் தன் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக வார்னர் ஆடும் மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்துள்ளார்.

இரண்டு சதம்

இரண்டு சதம்

கடந்த 2017ஆம் ஆண்டு தடைக்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் சதம் அடித்து அசத்தி இருந்தார். அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் தான் ஆடினார் வார்னர்.

ஹாட்ரிக் சதம்

ஹாட்ரிக் சதம்

இந்தப் போட்டியிலும் சதம் அடிக்க, இது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஹாட்ரிக் சதமாக மாறியது. மேலும், ஒருநாள் போட்டிகளில் அவரது 15வது சதம் ஆகும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பின்ச் 82, வார்னர் 107 ரன்கள் சேர்த்தனர். ஸ்டீவ் ஸ்மித் உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது.

Story first published: Wednesday, June 12, 2019, 20:07 [IST]
Other articles published on Jun 12, 2019
English summary
AUS vs PAK Cricket World cup 2019 : David Warner hit 15th ODI hundred
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+