AUS vs PAK : ரசிகர்களுடன் பாகிஸ்தான் வீரர் செய்த வேலை.. மெல்போர்ன் மைதானமே ஜாலியா இருக்குப்பா!
மெல்போர்ன்: மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியுடன் இணைந்து ஆஸ்திரேலியா அணி ரசிகர்கள் டான்ஸ் ஆடிய வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 318 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக லபுஷேன் 63 ரன்கள் சேர்த்தார். இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் ரிஸ்வான் - ஜமால் ஆகியோரின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 264 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 54 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன்பின் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் - மிட்செல் மார்ஷ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 96 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசி வெளியேறினார். இதன் மூலம் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நடைபெற்றது. மெல்போர்ன் மைதானத்தில் முதல் தளத்தில் அமர்ந்திருந்த ஜோடி ஒன்று கசமுசாவில் ஈடுபட, அதனை சரியாக பார்த்த கேமராமேன், உடனடியாக பெரிய ஸ்க்ரீனில் அவர்களை கொண்டு வந்தார். இதனால் அவசர அவசரமாக அங்கிருந்து முகத்தை மூடிக்கொண்டு அந்த ஜோடி கிளம்பியது.
அதேபோல் பாகிஸ்தான் வீரர்களிடம் ஆஸ்திரேலியா அணி ரசிகர்கள் அன்பை பொழிந்தனர். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்திருந்த போது, திடீரென அவர் டான்ஸ் ஆட அவருடன் சேர்ந்து மெல்போர்ன் மைதான ரசிகர்களும் டான்ஸ் ஆடி அசத்தினார். இந்த வீடியோவும் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications