For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனைவி தான் என் உலகம்.. அவரின்றி எதுவும் கிடையாது.. ஃபேர்வெல் ஸ்பீச்சில் எமோஷனலான டேவிட் வார்னர்!

சிட்னி: எனது பேட்டிங்கின் மூலம் ரசிகர்கள் அனைவரின் மனதிற்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளேன் என்று நம்புவதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுள்ளார். கடைசி இன்னிங்ஸில் அரைசதம் விளாசிய வார்னர், அதன்பின் கண்ணீருடன் விடைபெற்றார். பின்னர் ரசிகர்களுக்கு நன்றி கூறிய அவர், மகள்களை கட்டியணைத்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன்பின் சிட்னி மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயே குவிந்தனர்.

AUS vs PAK : My wife Candice is my world to me and thank u for what you have done says David Warner in his farewell speech

அவர்கள் முன் டேவிட் வார்னர் பேசுகையில், இந்த நாள் கனவு நிஜமானதை போல் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளோம். கடந்த 18 மாதங்களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த நாட்களாக அமைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, ஆஷஸ் தொடர் டிரா, உலகக்கோப்பை வெற்றி என்று மிகச்சிறந்த பயணமாக அமைந்துள்ளது. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் இடத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இன்ஜினை போலாகும். கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் அவர்களுடன் மிட்செல் மார்ஷ். அவர்கள் எந்தவித சோர்வும் இல்லாமல் வலைப்பயிற்சியிலும், உடற்பயிற்சி கூடத்தில் இருக்கிறார்கள். அதேபோல் பிசியோஸ், அணி நிர்வாகிகள் அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். இனி அவர்கள் மூவரையும் ஒருநாளும் வலைப்பயிற்சியில் விளையாட தேவை இல்லை. இருப்பினும் முடிவு என் கைகளில் இல்லை.

இன்று காலை காபி ஷாப் ஒன்றிற்கு சென்று காபி வாங்கி என் மகளுக்கு கொடுத்துவிட்டு, அதன்பின் காரில் ஏறினேன். அந்த நிமிடம் எனக்கு நிம்மதியாகவும் பெருமையாகவும் இருந்தது. சொந்த மண்ணில் எனக்கு ஆஸ்திரேலியா அணிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் செய்ததை செய்திருக்க முடியாது. நாம் அனைவரும் பொழுதுபோக்கிற்கு விளையாடுகிறோம். அதனால் நான் என்ன செய்ட்ய வேண்டும் என்று நினைத்தேனோ, அப்படி தான் கடைசி இன்னிங்ஸில் விளையாடினேன்.

எனது கிரிக்கெட் பயணத்தில் அனைத்து நேரங்களிலும் உடனிருந்தது டேவிட் வார்னர் தான். அவர்களின் ஆதரவு இல்லாமல், நிச்சயம் எதையும் செய்திருக்க முடியாது. அதேபோல் என் பெற்றோருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தான் நான் இங்கு நிற்பதற்கு காரணம். அதேபோல் என் சகோதரர் ஸ்டீவ்-ன் காலடி தடங்களை பின்பற்றி தான் கிரிக்கெட்டை தொடங்கினேன். அவருக்கு பின் மனைவி கேன்டிஸ் தான் அனைத்து தருணங்களிலும் உடனிருந்தவர். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் கொண்டாட்டமாக இருந்துள்ளேன். அவர் தான் என் உலகம் என்று சொல்ல முடியும்.

ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் பயணிக்கும் போது எமோஷனலாக இருக்கும். நிச்சயம் விளையாட முடியாது என்பதை அறிவேம். இருந்தாலும் என்னால் என்ன செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்வேன். ஆஸ்திரேலிய அணியில் உள்ள பலரும் 30 வயதை கடந்துவிட்டோம். அடுத்தடுத்து யாரும் மீண்டும் இளமையாக மாறப் போவதில்லை. ஆனால் ஒவ்வொருவரும் உலகத்தரம் வாய்ந்தவர்கள். எனது ஆட்டம் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்து வரும் இளம் வீரர்கள் எனது காலடி தடங்களை பின்பற்றுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, January 6, 2024, 11:15 [IST]
Other articles published on Jan 6, 2024
English summary
AUS vs PAK : My wife Candice is my world to me and thank u for what you have done says David Warner in his farewell speech
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+