Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குண்டு வெடிப்பின் எதிரொலி.. பாக். - ஆஸி தொடருக்காக போலீசார் நடத்தும் ஆப்ரேஷன்.. கராச்சியில் பரபரப்பு

கராச்சி: குண்டுவெடிப்பு எதிரொலியாக, கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் போலீசார் புதிய தேடுதல் ஆப்ரேஷனை தொடங்கியுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி மீது நடந்த தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எந்தவொரு அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றன.

கடந்தாண்டு இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் கூட பாதுகாப்பு குறைவு காரணமாக வெளியேறின.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

இப்படிபட்ட சூழலில், பாகிஸ்தானுக்கு துனிந்து சென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டிற்கு சென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. சமீபத்தில் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸை கூட ஆடவில்லை.

 2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

வெற்றிக்கான முதல் படியை எடுத்து வைக்கும் 2வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12ம் தேதி முதல் நடைபெறுகிறது. இப்போட்டி கராச்சியில் தேசிய மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இன்று திடீரென ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கும் ஹோட்டல் மற்றும் கராச்சி மைதானத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கர குண்டுவெடிப்பு

பயங்கர குண்டுவெடிப்பு

முதல் டெஸ்ட் போட்டி நடந்துக்கொண்டிருந்த போது, சில கிலோ மீட்டர் தூரம் தள்ளியுள்ள பெஷாவார் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 50 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து கராச்சியில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெரும் போலீஸ் படையை குவித்துள்ளது. மைதானத்தில் ஆபத்து நிறைந்த பொருட்கள் உள்ளதா என்றும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Story first published: Wednesday, March 9, 2022, 17:42 [IST]
Other articles published on Mar 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+