Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது பெரிய தப்பு.. தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டு அதிர வைத்த நம்பர் 1 பேட்ஸ்மேன்!

Recommended Video

Steve Smith punished himself| தனக்கு தானே தண்டனை கொடுத்த ஸ்மித்... ரசிகர்கள் அதிர்ச்சி

சிட்னி : டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதற்காக தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டதாக கூறி அதிர வைத்துள்ளார். தான் எப்போதுமே போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தால் தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்வேன் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

இந்த முறை அவர் தனக்கு என்ன தண்டனை கொடுத்துக் கொண்டார் என்பது பற்றியும் கூறி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஸ்டீவ் ஸ்மித் சறுக்கல்

ஸ்டீவ் ஸ்மித் சறுக்கல்

இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் வெறும் 4 ரன்களில் யாசிர் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். கடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து மண்ணில் பட்டையைக் கிளப்பிய ஸ்டீவ் ஸ்மித், சொந்த நாட்டில் சறுக்கலாக டெஸ்ட் தொடரை துவக்கினார்.

இரண்டு வீரர்கள்

இரண்டு வீரர்கள்

ஸ்மித் கைவிட்டாலும், டேவிட் வார்னர் 154, மார்க்ஸ் லாபுஷாக்னே 185 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை 580 ரன்கள் குவிக்க வைத்தனர். பர்ன்ஸ் 97, மாத்யூ வேட் 60 ரன்கள் அடித்து இருந்தனர்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஸ்திரேலியா அபார வெற்றி

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 240, இரண்டாம் இன்னிங்க்ஸில் 335 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்மித் தண்டனை

ஸ்மித் தண்டனை

அணி வெற்றி பெற்றாலும், தான் ரன் குவிக்கவில்லை என்பதை குற்றமாக பார்த்த நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தனக்கு தானே தண்டனைக் கொடுத்துக் கொண்டுள்ளார்.

3 கிலோமீட்டர் ஓட்டம்

3 கிலோமீட்டர் ஓட்டம்

மைதானத்துக்கு பேருந்தில் செல்ல வேண்டிய நிலையில், ஸ்டீவ் ஸ்மித் பேருந்தை விட்டுவிட்டு, மூன்று கிலோமீட்டர் தூரம், தங்கி இருக்கும் ஹோட்டல் முதல் மைதானம் வரை ஓடிச் சென்று இருக்கிறார்.

சதம் அடித்தால் பரிசு

சதம் அடித்தால் பரிசு

தான் ரன் அடிக்காவிட்டால் தண்டனை கொடுத்துக் கொள்வேன் என கூறும் ஸ்மித், சதம் அடித்தால் அன்று நிறைய சாக்லேட் உண்டு தனக்கு தானே பரிசளித்துக் கொள்வாராம்.

அதிர வைக்கும் செயல்

அதிர வைக்கும் செயல்

டெஸ்ட் அரங்கில் விராட் கோலியை முந்தி நம்பர் 1 வீரராக வலம் வரும் ஸ்டீவ் ஸ்மித், இப்படி தண்டனை கொடுத்துக் கொள்வது சிலரை அதிர்ச்சியடையவும், சிலரை வியப்படையவும் வைத்துள்ளது.

நெருங்கும் கோலி

நெருங்கும் கோலி

இதில் மற்றொரு முக்கிய விஷயம், ஐசிசி தரவரிசையில் கோலி வெறும் 3 புள்ளிகள் மட்டுமே ஸ்டீவ் ஸ்மித்தை விட பின்தங்கி இருக்கிறார். ஒரே ஒரு போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்ததால், ஸ்மித் தரவரிசையில் சறுக்கி இருக்கிறார்.

அசத்தல் யாசிர் ஷா

அசத்தல் யாசிர் ஷா

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் யாசிர் ஷா தான் ஸ்மித் விக்கெட்டை எடுத்தார். இவர் 11 இன்னிங்க்ஸ்களில் 7 முறை ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் போட்டிகளில் யாசிர் ஷாவை சமாளிப்பாரா ஸ்மித்?

Story first published: Wednesday, November 27, 2019, 19:15 [IST]
Other articles published on Nov 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+