Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 2 பந்தில் 4 ரன்.. மேக்ஸ்வெல் செய்த செயல்.. அரண்டு போன தென்னாப்பிரிக்கா.. ஆஸ்திரேலியா வெற்றி

கெய்ர்ன்ஸ்: ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. கிளென் மேக்ஸ்வெல்லின் அசாத்தியமான ரிவர்ஸ் ஸ்கூப் பவுண்டரி ஆஸ்திரேலிய அணிக்கு 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில், கிளென் மேக்ஸ்வெல்லின் தனி ஒருவன் ஆட்டத்தால், ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

AUS vs SA 3rd T20 Result Glenn Maxwell s Last-Ball Boundary Seals Thrilling Series Win over South Africa

பிரெவிஸின் பதிலடிக்கு ஆஸ்திரேலியாவின் தடுமாற்றம்

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, டெவால்ட் பிரெவிஸின் அசுரத்தனமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. பிரெவிஸ் 26 பந்தில் 53 ரன்கள் குவித்தார். ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டு இருந்தார்.

அடுத்து 173 ரன்கள் என்ற சவாலான இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு, கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 54 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. ஒரு கட்டத்தில் 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தோல்வியின் பிடியில் சிக்கியது.

மேக்ஸ்வெல் ஆட்டம்

ஆஸ்திரேலிய அணி தடுமாறியபோது களத்தில் நங்கூரம் போல் நின்ற கிளென் மேக்ஸ்வெல், ஆட்டத்தின் பொறுப்பைத் தன் தோள்களில் சுமந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நிதானமாகவும், அதே சமயம் தேவையான நேரங்களில் அதிரடியாகவும் எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தார்.

அவரது அபாரமான ஆட்டத்தால், தோல்வியின் பிடியிலிருந்த ஆஸ்திரேலியா, மெல்ல வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. அதே சமயம் 8 விக்கெட்கள் வீழ்ந்தன. கடைசி ஓவருக்கு போட்டி சென்றது. மேக்ஸ்வெல்லை மட்டுமே நம்பி இருந்த19:36:32து ஆஸ்திரேலிய அணி.

த்ரில் கிளப்பிய கடைசி ஓவர்!

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக்கில் இருந்தார். மறுமுனையில் ஆடம் ஜம்பா இருந்தார். தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி அந்த ஓவரை வீசினார்.

  • 19.1: முதல் பந்தில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை, கார்பின் போஷ் பவுண்டரி லைனில் அபாரமாகத் தடுத்து 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். (5 பந்தில் 8 ரன்கள் தேவை)

  • 19.2: என்கிடி வீசிய வைட் ஃபுல் டாஸ் பந்தை, மேக்ஸ்வெல் கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். (4 பந்தில் 4 ரன்கள் தேவை)

  • 19.3: அடுத்த பந்து ஹை ஃபுல் டாஸாக வர, அதை அடிக்கத் தவறினார் மேக்ஸ்வெல். நோ-பால் என்று ஆஸ்திரேலியா எதிர்பார்த்தது, ஆனால் நடுவர் மறுத்துவிட்டார். (3 பந்தில் 4 ரன்கள் தேவை)

  • 19.4: ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. என்கிடி வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் நேராக அடித்த மேக்ஸ்வெல், எளிதாக ஒரு ரன் ஓட வாய்ப்பிருந்தும், சிங்கிள் எடுக்க மறுத்தார். தன் மீது முழு நம்பிக்கை வைத்து, அடுத்த பந்தில் வெற்றியைத் தேடித் தருவேன் என்று அவர் எடுத்த முடிவு மிரள வைத்தது. (2 பந்தில் 4 ரன்கள் தேவை)

  • 19.5: என்கிடி வீசிய ஃபுல் டாஸ் பந்தை, முன்கூட்டியே கணித்த மேக்ஸ்வெல், தனது டிரேட்மார்க் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் மூலம் ஷார்ட் தேர்ட் மேன் திசையில் பவுண்டரிக்கு அடித்து, ஆஸ்திரேலியாவுக்கு நம்ப முடியாத வெற்றியைத் தேடித் தந்தார். பந்து பவுண்டரியைத் தொட்டதும், சிங்கத்தைப் போல கர்ஜித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

36 பந்துகளைச் சந்தித்த கிளென் மேக்ஸ்வெல், 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

Story first published: Saturday, August 16, 2025, 19:37 [IST]
Other articles published on Aug 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+