Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs AUS: சிஎஸ்கே ஸ்டார் ஏமாற்றம்.. தொடர்ந்து 9 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி.. தென்னாப்பிரிக்கா தோல்வி

டார்வின்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டாப் வரிசை வீரர்கள் தடுமாறினர். ஒரு கட்டத்தில் 75 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறியது.

Aus vs SA

அப்போது களத்தில் நின்ற டிம் டேவிட் அதிரடி காட்டி 52 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டர்களும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று கேமரன் கிரீன் 13 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க வீரர் மாபாகா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனை அடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. கேப்டன் மார்க்கரம் ஆறு பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தார். இதில் மூன்று பவுண்டரிகள் அடங்கும் லுகான் டி பிரிட்டோரியஸ் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே வீரர் பிரவீஸ் 6 பந்துகளில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

எனினும் மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கல்டன் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார் அதேபோன்று டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 37 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி வெற்றியை பெற்று விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஒரு கட்டத்தில் 120 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து பலமான நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த மூன்று ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தென்னாப்பிரிக்காவின் பின்வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நிற்க ஆடாததால் 20 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட் மூன்று விக்கெட்டுகளையும் பெண் டிவார்ஷியஸ் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் தென்னாபிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Story first published: Sunday, August 10, 2025, 19:19 [IST]
Other articles published on Aug 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+