Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs SA: 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா..3 வீரர்கள் சதம்..55 பந்துகளில் 118 ரன்கள் குவித்த கிரீன்

மெக்காய்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி சமீபிரதாய ஆட்டமாக தான் மெக்காய் நகரில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த இரண்டு போட்டிகளாக தடுமாறிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பினர். குறிப்பாக தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல் மார்ஷ் அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை சுளுக்கு எடுத்தனர்.

Australia vs south africa

வழக்கம்போல் அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 80 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 13 பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று கேப்டன் மிட்செக் மார்ஷ், அதிரடி காட்டி 105 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.

இதில் 5 சிக்சர்களும், ஆறு பவுண்டரிகளும் அடங்கும். தொடர்ந்து அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் எடுத்தார் மொத்தமாக அவர் 17 பவுண்டரிகளும், 5 சிக்சரும் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 34.1 ஓவரில் 250 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் 100 ரன்களில் பெவிலியன் திரும்ப மூன்றாவது விக்கெட்டுக்கு கேமரன் கிரீன் மற்றும் அலெக்ஸ் கெரி ஆகியோர் விளையாடினர்.

கேமரான் கிரீன் கடந்த சில போட்டிகளாக தடுமாறிய நிலையில், இன்று தான் ஏன் அதிரடி வீரர் என்பதை இன்று நிரூபித்தார். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட முயற்சி செய்த கேமரான் கிரீனை ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்தவே முடியவில்லை. சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்ட அவர் 47 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 55 பந்துகளை எதிர் கொண்டு கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 117 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பௌண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.இதேபோன்று அலெக்ஸ் கெரி 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்து இருக்கிறது. இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

Story first published: Sunday, August 24, 2025, 13:49 [IST]
Other articles published on Aug 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+