For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் சதம் வீண்.. தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி… ஆஸி. போராடி தோல்வி!

மான்செஸ்டர் : ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய கடைசி உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா போராடி தோல்வி அடைந்தது.

அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்கா, ஆறுதல் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் வார்னர் அடித்த சதம் வீணானது. கடைசி நேரத்தில் அலெக்ஸ் கேரியின் போராட்டமும் பயனளிக்கவில்லை. இந்தத் தோல்வி மூலம் ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் எய்டன் மார்கிரம் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி காக் 52, கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் 100, டஸ்ஸன் 95 ரன்கள் குவித்தனர்.

ஆஸி. பந்துவீச்சு

ஆஸி. பந்துவீச்சு

தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழந்து 325 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் நாதன் லியோன் மற்றும் மேக்ஸ்வெல் மட்டுமே ஆறு ரன்களுக்கும் குறைவாக ரன்கள் கொடுத்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர். ஸ்டார்க், லியோன் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பெஹ்ரண்டாப், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஆஸி,வுக்கு அடி

ஆஸி,வுக்கு அடி

சவாலான இலக்கை சேஸிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் வரிசையாக அடி விழுந்தது. ஆரோன் பின்ச் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜாவிற்கு காலில் காயம் ஏற்படவே அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டாய்னிஸ் 22, மேக்ஸ்வெல் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட்கள் இழந்து கடும் சிக்கலில் சிக்கியது.

வார்னர் சதம்

வார்னர் சதம்

அப்போது அலெக்ஸ் கேரி, வார்னர் ஜோடி பொறுப்பாக ஆடத் துவங்கியது. வார்னர் சதம் கடந்தார். கேரி அரைசதம் கடந்து அதிரடியாக ஆடி வந்தார். ஆஸ்திரேலியா ஓவருக்கு 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், வார்னர் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மீண்டும் வந்த கவாஜா

மீண்டும் வந்த கவாஜா

பாட் கம்மின்ஸ் 9, கேரி 85 ரன்கள் எடுத்து வெளியேறினர். உஸ்மான் கவாஜா மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். கடைசி 12 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலை வரை போட்டியை எடுத்துச் சென்றது ஆஸ்திரேலியா.

ரபாடா அபாரம்

ரபாடா அபாரம்

49வது ஓவரில் ரபாடா அபாரமாக செயல்பட்டு கவாஜா மற்றும் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தினார். 1 விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில், வெற்றி பெற கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா..

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா முதல் நான்கு பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்தாவது பந்தில் நாதன் லியோன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அரையிறுதிச் சுற்றில் மாற்றம்

அரையிறுதிச் சுற்றில் மாற்றம்

தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததால், புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சென்றது. அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது ஆஸ்திரேலியா. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

Story first published: Sunday, July 7, 2019, 2:29 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
AUS vs SA Cricket World cup 2019 : Australia vs South Africa match result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+