நியாயமாரே.. ஆதாரம் இல்லை என அம்பயர் கொடுத்த முடிவு.. அதிர்ச்சியில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்!
சிட்னி: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் இதுவரை எந்தவொரு நடுவரும் எடுத்திராத புதிய முறையை 3வது நடுவர் கையாண்டது ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகின்றன. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளன்றே அம்பயர் மோசமான முடிவை கொடுத்துள்ளார்.

புதிய சர்ச்சை
முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி பவுலர் மார்கோ யான்சன் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபஸ்சாக்னே எட்ஜானார். அந்த பந்து நேராக ஸ்லிப்பில் நின்ற ஃபீல்டரிடம் கேட்ச்சாக மாறியது. ஆனால் பந்து முதலில் புற்களில் பட்டதா அல்லது கைகளுக்குள் தான் சென்றதா என முடிவெடுக்க முடியாமல் கள நடுவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

3வது நடுவர்
எனினும் இறுதியில் சாஃப்ட் சிக்னலாக அவுட் கொடுத்துவிட்டு 3வது நடுவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த கேட்ச்-ஐ பல ஆங்கிள்களில் பார்த்த 3வது நடுவர், பந்து எங்கு முதலில் பிட்ச் ஆனது என்பது சரியாக நிரூபிக்கப்படவில்லை, இதனால் எந்த முடிவும் எடுக்க முடியாது எனக்கூறினார். ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் நாட் அவுட் எனக் கொடுத்துவிட்டார்.

காரணம் என்ன
அதாவது சாஃப்ட் சிக்னலில் அவுட் கொடுக்கப்பட்டுவிட்டு, 3வது நடுவரால் எந்தவித முடிவும் எடுக்க முடியவில்லை என்றால் கள நடுவரின் முடிவுக்கே செல்ல வேண்டும். ஆனால் வித்தியாசமாக இந்த போட்டியில் மட்டும் கள நடுவர்களின் முடிவினை மாற்றி நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஸ்கோர் விவரங்கள்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் ஓப்பனிங் வீரர் டேவிட் வார்னர் 10 ரன்களுக்கெல்லாம் அவுட்டானார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த உஸ்மன் கவாஜா மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் சிறாப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டு வருகின்றனர். சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 121 பந்துகளில் 54 ரன்களுடன் களத்தில் நாட் அவுட்டாகாமல் இருக்கிறார். மறுமுணையில் மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்களை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications