Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs SA: 4 விக்கெட்,1 ரன் அவுட்.. பட்டையை கிளப்பிய டிராவிஸ் ஹெட்.. 296 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா

கெய்ர்ன்ஸ்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் முதல் ஒருநாள் போட்டி இன்று கெய்ர்ன்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம்பிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர், ஏய்டன் மார்க்கரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

Aus vs Sa

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்த நிலையில், ரியான் ரிக்குல்டன் 33 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதே போன்று கேப்டன் பவுமாவும், மார்க்கரம் உடன் சேர்ந்து அணியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய ஏய்டன் மார்க்கரம் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 81 பந்துகளை எதிர்கொண்டு 82 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று பவுமா 65 ரன்களிலும் மேத்யூ பிரிட்ஸ்கி 58 ரன்கள் எடுத்தார்.

இதில் மூலம் தனது முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அரை சதம் அடித்து பிரிட்ஸ்கி சாதனை படைத்திருக்கின்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் டக் அவுட் ஆனார். இந்த சூழலில் சிஎஸ்கே வீரர் டிவால்ட் பிரவீஸ் களமிறங்கினார். முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்திய நிலையில் இரண்டாவது பந்தில் அவர் கேட்ச் ஆனார். இறுதியில் வியான் முல்டர் மற்றும் கேசவ் மஹராஜ் ஜோடி நிதானமான ஆட்டத்தை கடை படுத்தினர்.

இதில் கேசவ் மகராஜ் 13 ரன்களில் வெளியேற கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற வியான் முல்டர் 26 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் யாருமே எதிர்பார்க்காத வகையில் டிராவிஸ் ஹெட் நான்கு ஓவர்கள் வீசி, 57 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அது மட்டும் இல்லாமல் ஒரு ரன் அவுட்டையும் செய்தார்.

Story first published: Tuesday, August 19, 2025, 14:47 [IST]
Other articles published on Aug 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+