Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: பும்ரா ரெக்கார்டை காலி செய்த தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை

லண்டன்: தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் உடைத்து இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஆலன் டொனால்டின் சாதனையை அவர் முறியடித்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Kagiso Rabada Test Cricket world test championship South Africa australia

அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள்:

439 - டேல் ஸ்டெய்ன்
421 - ஷான் பொல்லாக்
390 - மக்காயா நிடினி
332 - காகிசோ ரபாடா

330 - ஆலன் டொனால்ட்

மேலும், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகள் அல்லது அதற்கும் மேல் எடுத்த பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் உடையவராக மாறியிருக்கிறார் காகிசோ ரபாடா. இந்தப் பட்டியலில் முன்னர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் இருந்தார். அவரை முறியடித்து இருக்கிறார் ரபாடா.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பும்ரா 64 விக்கெட்டுகளை 39.9 என்ற பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்டில் வீழ்த்தி இருந்தார். அதாவது, 39.9 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற விகிதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் விக்கெட் வீழ்த்தி இருந்தார். தற்போது காகிசோ ரபாடா 38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

மேலும், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தியவர்கள் பட்டியலில் மிகச்சிறந்த பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளது ரபாடா தான். அவர் 39.1 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

Story first published: Thursday, June 12, 2025, 8:27 [IST]
Other articles published on Jun 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+