Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs SCO - 3வது டி20 போட்டியில் கலக்கிய மும்பை வீரர்..பேட்டிங், பவுலிங்கில் கலக்கல்! ஆஸி. வெற்றி

scotland vs australia aus vs sco cameron green
எடின்பர்க் : ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டி எடின்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 17 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி அடங்கும்.

மற்றொரு தொடக்க வீரரான ஆலி ஹாரிஸ் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என எட்டு பந்துகளில் 12 ரன்கள் சேர்த்தார். இருவரும் அதிரடியாக ஆட முற்பட்டு அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து களமிறிங்கிய பிராண்டின் மெக்முல்லன் அபாரமாக விளையாடி ஸ்காட்லாந்து அணியை கௌரவமான இலக்கிற்கு அழைத்து சென்றார்.ஆனால் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

இதனால் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிராண்டன் மெக்முல்லன் 39 பந்துகளில் 56 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் கேமரான் கிரீன் அபாரமாக செயல்பட்டு நான்கு ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 11 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். கேப்டன் மிட்செல் மார்ஷ் 23 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கேமரன் கிரீன் ஆட்டத்தில் அதிரடி காட்டினார்.

39 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இதில் ஐந்து இமாலய சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். டிம் டேவிட் 25 ரன்கள் ஆரோன் ஹார்ட்லி 11 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலிய அணி 16 புள்ளி ஒரு ஓவர் எல்லாம் நான்கு விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்தத் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி வரும் 11ஆம் தேதி சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்கும்.

Story first published: Sunday, September 8, 2024, 8:41 [IST]
Other articles published on Sep 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+