Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாபெரும் மைல்கல் சாதனை.. 700 விக்கெட்டுகளைக் வீழ்த்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான் பவுலர் ஸ்டார்க்

கல்லே: ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மாபெரும் மைல்கல் சாதனை ஒன்றை எட்டி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்று இருக்கிறார்.

தனது 35வது பிறந்தநாளின்போது மிட்செல் ஸ்டார்க் இந்த சாதனையை செய்து இருக்கிறார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கல்லே நகரில் நடந்து வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னேவை ஆட்டமிழக்கச் செய்த போது மிட்செல் ஸ்டார்க் இந்த சாதனையை படைத்தார்.

AUS vs SL 1st test Australian legend Mitchell Starc took 700 international wickets

ஸ்டார்க்கின் மொத்த விக்கெட்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் 377 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 244 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 79 விக்கெட்டுகளும் அடங்கும். இந்தச் சாதனை மூலம், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஷேன் வார்ன் (1001), கிளென் மெக்ராத் (949), மற்றும் பிரெட் லீ (718) ஆகியோருக்குப் பின் நான்காவதாக ஸ்டார்க் இடம் பெற்றுள்ளார்.

ஷேன் வார்னே சுழற் பந்துவீச்சாளர் என்ற வகையில், அவரை விடுத்தது கிளென் மெக்ராத் மற்றும் பிரெட் லீக்கு அடுத்து, இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் வீரர்களில், 700 விக்கெட்டுகளைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் ஸ்டார்க் பெற்றுள்ளார். ஷகிப் அல் ஹசன் ஏற்கனவே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 597 விக்கெட்டுகளுடன் ஸ்டார்க்கிற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

700 விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டார்க் ஆறாவது இடத்தில் உள்ளார். வெறும் 373 இன்னிங்ஸ்களில் அவர் இந்தச் சாதனையை செய்து இருக்கிறார்.

ஸ்டார்க்கின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2014-15 ஆம் ஆண்டில் ஷேன் வார்ன் அவரை "மென்மையானவர்" என்றும், அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் விமர்சித்தார். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில், மிட்செல் ஸ்டார்க் தனது திறமையை வளர்த்து, ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

Story first published: Friday, January 31, 2025, 7:32 [IST]
Other articles published on Jan 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+