Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs SL: 35வது சதத்தை விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்.. 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை.. கவாஜா சதம்

காலே : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்மித் செயல்பட்டார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட்டும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 92 ரன்கள் சேர்த்தது.

aus vs sl steve smith usman khawaja australia vs srilanka

டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதனை அடுத்து மூன்றாவது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லாபஸ்சென் 20 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் தடுமாறிய உஸ்மான் கவாஜாவும் நான்காவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் இணைந்து அபாரமாக விளையாடினார்.

கவாஜா நிதானமாக ஆடி இலங்கை அணியின் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டார். மறுபுறம் ஸ்மித் பல சாதனைகளை இன்று படைத்தார். முதல் ரன்னை எடுத்த போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த நான்காவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார். இதனை தொடர்ந்து இலங்கை பந்துவீச்சுக்கு இந்த ஜோடி சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஸ்மித், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 35 வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் உஸ்மான் கவாஜாவும் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்திருக்கிறது.

உஸ்மான் கவாஜா 147 ரன்களும், ஸ்மித் 14 ரன்களும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். இலங்கை அணியின் பந்துவீச்சு தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜாஃபர் வெண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் ஷாம் கோன்ஸ்டாஸ் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கு பாட் கம்மின்ஸ் வரவில்லை. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதால் இந்த தொடரின் முடிவுகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Story first published: Wednesday, January 29, 2025, 18:24 [IST]
Other articles published on Jan 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+