பாக்.கை வீழ்த்திய கையோடு இன்று ஜிம்பாப்வேவை பதம் பார்க்க ஆயத்தமாகும் ஆஸி!
Recommended Video

ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை!- வீடியோ
ஹராரே : ஆஸ்திரேலியா அணி இன்று ஜிம்பாப்வேவுடன் தனது 2வது டி20 போட்டியில் மோதவுள்ளது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று நாடுகள் பங்குபெறும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி , தனது கடந்த கால தோல்விகளில் இருந்து மீண்டு பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இத்தொடரின் மூன்றாவது ஆட்டம் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே இன்று நடைபெறவிருக்கிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி, ஜிம்பாப்வே அணியை எளிதில் வெற்றி கொள்ளும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வேயின் 5 முன்னணி வீரர்கள் இத்தொடரில் இடம் பெறாதது அந்த அணிக்கு பெரும் பின்னைக்கவ பார்க்கப்படுகிறது. முன்னதாக நடந்த முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானுக்கெதிராக தோல்வியை தழுவியது.
மறுபுறம் ஆஸ்திரேலியா, மிகவும் வலுவான அணியாக உருமாறியுள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியில் இருந்து மீண்டு மிகவும் அபாரமாக பாகிஸ்தானை வென்றது.
தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு போயிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு இந்த தொடர் அவர்களுக்கு ஆறுதலாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கேப்டன் ஆரோன் பின்ச்சின் அதிரடியும், வேகப்பந்துவீச்சாளர் பில்லி ஸ்டான்லேக்கின் ஆக்ரோஷமான பந்துவீச்சும் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு மற்றுமொரு வெற்றியை தேடித்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஜிம்பாப்வே அணி கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை ஆஸ்திரேலியா அணியை டி20 போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, July 3, 2018, 12:45 [IST]
Other articles published on Jul 3, 2018


Click it and Unblock the Notifications