Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs ZIM: ஜிம்பாப்வே வெற்றி உலக கிரிக்கெட்டிற்கான செய்தி.. உண்மையிலே நீ அசீர்வாதம் தான்.. சச்சின் பாராட்டு

மும்பை: டி20 உலகக் கோப்பை போட்டியில், ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் அதிர்ச்சி அளித்தது. பிளெஸ்ஸிங் முசரபாணி மற்றும் பிரையன் பென்னட்டின் சிறப்பான ஆட்டத்தால் இந்த வரலாற்று வெற்றி சாத்தியமானது. இந்த வெற்றியை இந்திய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் வெகுவாகப் பாராட்டினர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஜிம்பாப்வேயின் இந்த வெற்றியை "உலகிற்கு ஜிம்பாப்வே தந்த செய்தி " என்று வர்ணித்தார். நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றி ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியதாக சச்சின் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

"ஜிம்பாப்வே அணி உலகிற்கு சொல்லும் செய்தி தான் இந்த வெற்றி! ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவதற்கு உண்மையான மன உறுதி வேண்டும். மேலும், பிளெஸ்ஸிங் உண்மையில் ஒரு ஆசீர்வாதமாகவே மாறி, அருமையான 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த உலகக் கோப்பை மிகவும் சுவாரஸ்யமாக அமைகிறது!" என்று சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் பிளெஸ்ஸிங் முசரபாணி மற்றும் பிராட் எவன்ஸின் துல்லியமான பந்துவீச்சு, ஆஸ்திரேலியாவை 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்குள் சுருட்டியது. இதில் முசரபாணி நான்கு விக்கெட்டுகளையும், எவன்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் ஜிம்பாப்வே பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

ஜிம்பாப்வே அணியின் ஃபில்டிங், கேட்ச் செயல்பாடுகளை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பாராட்டினார். "ஜிம்பாப்வே அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு அபாரமாக இருந்தாலும், டோனி முனியோங்காவின் ஃபில்டிங் எதிரணிக்கு அழுத்தத்தை அதிகரித்தது. அவர் குறைந்தபட்சம் 12-15 ரன்கள் சேமித்து, டீப் மிட் விக்கெட்டில் ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்து, வெற்றியை உறுதி செய்தார்" என்று கூறினார்.

"களத்தின் அளவு சரியாக இருக்கும்போது, கிரிக்கெட் திறன்கள் வெளிப்பட்டு, விளையாட்டின் அனைத்து அம்சங்களுக்கும் வாய்ப்பளிக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பையில் பிட்ச்கள் மிகவும் சமநிலையுடன் இருந்ததை நான் உண்மையில் விரும்பினேன்" என்று அஸ்வின் குறிப்பிட்டார்.

2021 டி20 உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு, மேட் ரென்ஷா மட்டும் தனி ஒரு வீரராகப் போராடினார். அவரது 65 ரன்கள் சேர்த்து ஜிம்பாப்வேயின் கடுமையான பந்துவீச்சுக்கு எதிராக வீணானது. டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே இரண்டாவது முறையாக தோற்கடித்தது. இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பையிலும் அவர்கள் வென்றிருந்தனர்.

Story first published: Friday, February 13, 2026, 17:38 [IST]
Other articles published on Feb 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+