Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Aus vs ZIM: நம்ப முடியாத வெற்றி.. தம்பிகளுடன் இணைந்தது ஒரு அண்ணனாக வென்றேன்- ஜிம்பாப்வே கேப்டன் ஷிக்கந்தர் ராசா

கொழும்பு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவு ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் முன்னாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்திய பிறகு 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சம்பவத்தை ஜிம்பாப்வே செய்திருக்கிறது.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிம்பாப்வே கேப்டன் ஷிக்கந்தர் ராசா, இலங்கை நான் ஏற்கனவே நிறைய போட்டிகளில் விளையாடிருக்கின்றேன். இது போன்ற வெப்பநிலையில் விளையாடும் போது உடலில் தசைப்பிடிப்பு ஏற்படும். எனினும் இரண்டு நாட்களில் இது சரியாகிவிடும்.

இது எல்லாம் எனக்கு பெரியதாகவே தெரியவில்லை நான் மிக்க மகிழ்ச்சியில் இருக்கின்றேன். என் அணியை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். ஒரு அண்ணன், மற்ற தம்பிகளுடன் இணைந்து வெற்றி பெற்றால் எப்படி இருக்குமோ அதே போல் தான் எனக்கும் இருக்கின்றது. எங்கள் அணியில் கலாச்சாரம் சூழல், ஒற்றுமை இவைதான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது உண்மையிலே நம்பவே முடியவில்லை . பத்து ஓவரில் 70 ரன்களுக்கு மேல் அடித்தபோது நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். ஏனென்றால் இந்த போட்டியில் நாம் 190 ரன்கள் எல்லாம் அடிக்கத் தேவையில்லை. ஏனென்றால் 190 ரன்கள் எடுக்க முயற்சி செய்தால் 140 ரன்கள் ஆட்டம் இழந்து வருவதை நான் அதிகம் பார்த்து விட்டேன். இலங்கையில் நாம் அதிரடி காட்ட முயற்சித்தால் விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.

எனவே களத்தில் நின்று கடைசிவரை விளையாடுங்கள் என்ற மெசேஜை நாங்கள் எங்கள் அணி பேட்டர்களிடம் வழங்கினோம். இதைப் போன்று இந்தப் போட்டியில் பில்டிங் கேட்சிங் பவுலர்களை தடுப்பது என எங்கள் அணி வீரர்கள் பிரமாதப்படுத்தி விட்டார்கள். எங்கள் அணியில் தற்போது 13 வீரர்கள் தான் இருக்கிறார்கள். என்னை சேர்த்து இரண்டு பேருக்கு தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனை இருக்கின்றது. இதனால் எங்கள் அணியில் மேலும் இரண்டு வீரர்களை மாற்றுவீரராக எங்கள் அணி வாரியம் நியமிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த வெற்றியின் மூலம் எங்களுடைய அணி வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியுடையவர்கள். இதே போன்ற ஒரு செயல் திட்டத்தை நாம் தொடர்ந்தால் பெரிய வெற்றிகளை பெற முடியும். ஒரு சமயத்தில் ஒரு போட்டி என்று மனதில் வைத்து விளையாட வேண்டும். நாங்கள் இந்த போட்டியில் நல்ல நிலைமையில் இருக்கின்றோம். இதனால் எங்களுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு உறுதியாகிவிட்டது என்று சொல்ல முடியாது. இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியுமே மிகவும் முக்கியம் வாய்ந்தது ஆகும் என்று சிக்கந்தர் ராசா தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 13, 2026, 15:24 [IST]
Other articles published on Feb 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+