For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

AUS vs ZIM: மெகா ட்விஸ்ட்.. ஜிம்பாப்வேயிடம் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா.. உலகக்கோப்பையில் திருப்பம்

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைய்த் தொடரில் மிகப்பெரிய திருப்பமாக, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2007 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஜிம்பாப்வே, மீண்டும் ஒருமுறை அதே சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற குரூப் பி பிரிவு லீக் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே நிதானமான பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டாடிவானாஷே மருமானி 21 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். பர்ல் தனது பங்கிற்கு 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா, ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 13 பந்துகளைச் சந்தித்த அவர், 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 25 ரன்கள் விளாசினார். பிரையன் பென்னட் 56 பந்துகளில் 64 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

AUS vs ZIM Zimbabwe defeated Australia in T20 World Cup 2026 Historic 23-Run Victory Shakes Up Group B

ஆஸ்திரேலியாவின் ஆரம்பமே அதிர்ச்சி

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் டிராவிஸ் ஹெட்டும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ரென்ஷா-மேக்ஸ்வெல் போராட்டம்

சரிவிலிருந்து அணியை மீட்க மேட் ரென்ஷா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஜோடி போராடியது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்கு 77 ரன்கள் சேர்த்தது. மேக்ஸ்வெல் 31 ரன்களில் ஆட்டமிழக்க, தனி ஆளாகப் போராடிய மேட் ரென்ஷா 44 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மிரட்டிய ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள்

ஜிம்பாப்வே தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முசரபானி அபாரமாகப் பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்குத் துணையாக பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குரூப் பி பிரிவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே அணியின் இந்த வரலாற்று வெற்றி, தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Friday, February 13, 2026, 14:58 [IST]
Other articles published on Feb 13, 2026
English summary
AUS vs ZIM: In a massive T20 World Cup 2026 upset, Zimbabwe defeated powerhouse Australia by 23 runs in Colombo. Blessing Muzarabani's four-wicket haul and Brian Bennett's steady 64 steered Zimbabwe to a historic win.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+