Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs ZIM: ஆஸ்திரேலியா தோற்க முக்கிய காரணமே இதுதான்.. ஜிம்பாப்வே செய்த சம்பவம்.. சூப்பர் கேட்ச்கள்

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எவ்வளவு முக்கியக் காரணமோ, அதைவிட ஒரு படி மேலாக அவர்களின் அபாரமான ஃபீல்டிங் பங்களித்துள்ளது. ஒவ்வொரு ரன்னையும் தடுத்து நிறுத்தியதும், நம்ப முடியாத கேட்ச்களைப் பிடித்ததும்தான் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. விக்கெட்கள் இழக்காத போதும் ஜிம்பாப்வே குறைந்த ஸ்கோர் எடுத்ததாகவே முதலில் கருதப்பட்டது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி விரைவாக விக்கெட்களை இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

AUS vs ZIM Zimbabwe Outshines Australia with Incredible Fielding Secure Historic T20 World Cup Upset

ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் பிளெஸ்சிங் முசரபானி (4 விக்கெட்டுகள்) மற்றும் பிராட் எவன்ஸ் (3 விக்கெட்டுகள்) ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை சரித்தாலும், அவர்களுக்குப் பக்கபலமாக நின்றது சக வீரர்களின் துடிப்பான ஃபீல்டிங்தான்.

மேக்ஸ்வெல்லை திணறடித்த ஃபீல்டிங்

ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்களை இழந்து சேஸிங் செய்து கொண்டு இருந்த போது அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கிளென் மேக்ஸ்வெல் களத்தில் இருந்தார். அவர் எப்படியும் போட்டியை வென்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜிம்பாப்வே ஃபீல்டர்கள் அவருக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர்.

மேக்ஸ்வெல் அடித்த இரண்டு பந்துகள் பவுண்டரிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவுண்டரி லைனில் நின்றிருந்த டோனி முனியோங்கா மற்றும் மாற்று வீரர் கிளைவ் மடண்டே ஆகியோர் அற்புதமாக தடுத்து நிறுத்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் அதிகரித்தது.

பறந்து பிடித்த முனியோங்கா

இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில், பென் ட்வார்ஷூயிஸ் அடித்த பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் நின்றுகொண்டிருந்த டோனி முனியோங்கா, காற்றில் பறந்து சென்று ஒற்றைக் கையில் பிடித்த கேட்ச் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த அற்புதமான கேட்ச் ஆஸ்திரேலியாவின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்தது. இதுமட்டுமின்றி, போட்டியின் ஆரம்பத்தில் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தவும் ஜிம்பாப்வேயின் துல்லியமான ஃபீல்டிங் உதவியது.

கடைசி பந்தில் ரன் அவுட்

போட்டியின் கடைசி விக்கெட்டையும் ஜிம்பாப்வே தனது ஃபீல்டிங் திறமையால் தான் வீழ்த்தியது. பிராட் எவன்ஸ் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை மேத்யூ குனேமன் எதிர்கொண்டார். பந்து பேட்ஸ்மேனைக் கடந்து பந்துவீச்சாளரிடமே சென்றது. உடனடியாக ஓடிவந்து பந்தை எடுத்த பிராட் எவன்ஸ், அற்புதமான ஒரு அண்டர் ஆர்ம் த்ரோ மூலம் நேரடியாக ஸ்டம்பைத் தாக்கினார். இதனால் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆக, ஜிம்பாப்வேயின் வெற்றி உறுதியானது.

ஒரு டி20 போட்டியில் ரன்களை எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் ரன்களைத் தடுப்பது என்பதை ஜிம்பாப்வே அணி இந்த ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவுக்குப் பாடம் நடத்தியுள்ளது. அவர்களின் இந்த ஃபீல்டிங் அர்ப்பணிப்புதான் இந்த வரலாற்று வெற்றிக்கு அடித்தளமிட்டது.

Story first published: Friday, February 13, 2026, 18:46 [IST]
Other articles published on Feb 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+