Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி அவுட்டானதும்.. பவுண்டரி லைன் அருகே வந்த ஆஸி. கோச்.. ஷரத்துல் மீது இவ்வளவு பயமா? பரபர சம்பவம்!

சிட்னி: நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் செய்த காரியம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது. இந்தியா 20 ஓவர் முடிவில் 144/4 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் செய்த காரியம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. நேற்று போட்டியில் கேப்டன் கோலி 85 ரன்கள் எடுத்து இருந்த போது அவுட்டானார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

உள்ளே வந்தார்

உள்ளே வந்தார்

கோலிக்கு பின் ஷர்துல் தாக்கூர் களமிறங்க வந்தார். இவர் வருகையை பார்த்து பதறிப்போன ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பவுண்டரி கோட்டிற்கு அருகே வந்து அணியை வழி நடத்த தொடங்கினார். கால்பந்து பயிற்சியாளர்கள் எல்லைக்கு அருகே வந்து, அறிவுரை வழங்குவது போல கத்தி கத்தி, இவர் அறிவுரைகளை வாங்கிக்கொண்டு இருந்தார்.

பயம்

பயம்

ஷரத்துல் தாகூர் பவுலர் என்றாலும் கூட அவர் அதிரடியாக பேட்டிங் செய்ய கூடியவர். இதனால் கடைசி நேரத்தில் அவர் போட்டியை மாற்றிவிடுவார் என்று பயந்து இப்படி ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் நேரடியாக பவுண்டரி லைன் அருகே வந்து அறிவுரை வழங்கினார். இப்படி போடு, அப்படி போடு, பீல்டரை அங்கே நிற்க வை என்று அறிவுரைகளை வழங்கினார்.

பதறவிட்டார்

பதறவிட்டார்

அதேபோல் ஷரத்துல் தாக்கூர் நேற்று அதிரடியாக ஆடினார். வெறும் 7 பந்துகளில் 17 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பேஸ்ட்மேன்களை பதறவிட்டார். ஆஸ்திரேலிய அணியின் கோச் ஜஸ்டின் நேற்று இப்படி மைதானத்தின் எல்லைக்கு அருகே வந்து வீரர்களுக்கு அறிவுரை வழங்கியது விதிப்படி தவறு என்பது குறிப்பிட்டுள்ளது.

Story first published: Wednesday, December 9, 2020, 9:45 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+