Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபாப் எடு.. கொண்டாடு... இங்கிலாந்தை வென்றதை "தின்று" கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஆசஷ் டெஸ்ட் போட்டியில் சிறப்பான வெற்றி பெற்று தொடரை சமன் செய்ததை ஆஸ்திரேலிய வீரர்கள் படு உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

லண்டனில் உள்ள நைட் கிளப்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் மற்றும் கறி விருந்துடன் இந்தக் கொண்டாட்டம் நடந்துள்ளது.

அனைத்து வீரர்களுமே இந்த கொண்டாட்டத்தை நல்லதொரு புத்துணர்ச்சி தரும் உபாயமாகவும் எடுத்துக் கொண்டு காதலியர், மனைவியருடன் ஜாலியாக இருந்துள்ளனர்.

அடங்காத ஆசஷ் வெறி

அடங்காத ஆசஷ் வெறி

இந்தியா, பாகிஸ்தான் மோதினால் எப்படி அனல் பறக்குமோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் போட்டிகளும். அதுவும் ஆசஷ் தொடர் என்றால் கேட்கவே வேண்டாம். கெளரவம் பட சிவாஜி போல இருவரும் மாறி முட்டிக் கொள்வார்கள்.

தோற்றால் அவ்வளவுதான்

தோற்றால் அவ்வளவுதான்

இதில் வெல்பவர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அப்படி ஒரு போட்டித் தொடர் இது. இப்போதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் நடந்து வரும் இந்தத் தொடரில் முதல் டெஸ்ட்டை இங்கிலாந்து வென்றது. ஆனால் 2வது டெஸ்ட்டை அதிரடியாக வென்ற ஆஸ்திரேலியா தொடரை சம நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

லெபனான் ரெஸ்டாரெண்ட்டில் கபாப் கடி

லெபனான் ரெஸ்டாரெண்ட்டில் கபாப் கடி

2வது டெஸ்ட் போட்டியில் வென்றதை ஆஸ்திரேலிய வீரர்கள் பயங்கரமாக கொண்டாடியுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் தனது காதலி டேனி வில்லிஸ், மிட்சல் மார்ஷ் தனது மனைவி இசபெல்லே பிளாட் மற்றும் பீட்டர் சிடில் ஆகியோர் லெபனீஸ் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று கபாப் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மற்ற வீரர்களும் பல்வேறு நைட் கிளப்களுக்குச் சென்று கொண்டாடினர்.

கவலையில் கோச் லெஹ்மான்

கவலையில் கோச் லெஹ்மான்

வீரர்கள் இப்படி ஜாலியாக இருக்க பயிற்சியாளர் டேரன் லெஹமான் சற்று கவலையில் உள்ளார். காரணம், 29ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்வதில் குழப்பமாகியுள்ளதால்.

புத்தரை விட அமைதியாக இங்கிலாந்து அணி

புத்தரை விட அமைதியாக இங்கிலாந்து அணி

மறுபக்கம் இங்கிலாந்து தரப்பில் மயான அமைதி நிலவுகிறது. 2வது டெஸ்ட்டில் மிகவும் மோசமாக தோற்ற அதிர்ச்சியிலிருந்து அந்த அணி இன்னும் மீளவில்லை. புதிய திட்டங்கள் குறித்து கேப்டன் அலிஸ்டயர் குக்கும், பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்ஸும் ஆலோசித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, July 22, 2015, 11:07 [IST]
Other articles published on Jul 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+