
25 பந்துகளில் 5 விக்கெட் காலி
நேற்றைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது 4.1 ஓவர்களில் அதாவது 25 பந்துகளில் முதல் 5 விக்கெட்களையும் பறி கொடுத்திருந்தது ஆஸ்திரேலியா. 2002க்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு குறுகிய காலத்தில் 5 விக்கெட்களை இழப்பது இதுவே முதல் முறையாகும்.

111 பந்துகள் மட்டுமே
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 111 பந்துகள் வரை மட்டுமே தாக்குப் பிடித்தது. அதாவது 18.3 ஓவர்கள் வரை மட்டுமே அவர்கள் களத்தில் நின்றனர். ஒரு டெஸ்ட் போட்டியின் மிகக் குறுகிய இன்னிங்ஸ் இதுதான். ஆஸ்திரேலியாவுக்கு இது 3வது மிகக் குறுகிய இன்னிங்ஸ் ஆகும்.

முதல் ஓவரிலேயே 2 விக்கெட் போச்சு
தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி விட்டார் ஸ்டூவர்ட் பிராட். 2002ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோல 2 முறை நடந்துள்ளது. 2006ல் இர்பான் பதான் பாகிஸ்தானுக்கு எதிராக இதைச் செய்தார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் கெய்ர்ன்ஸ் 2002ல் செய்துள்ளார்.

ரோஜர்ஸுக்கு முதல் முட்டை
ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் நேற்று தனது 46வது இன்னிங்ஸை ஆடினார். இதில் முதல் முறையாக நேற்று அவர் டக் அவுட் ஆனார்.

300க்கு மேல் எடுத்த 5 பேர்
ஸ்டூவர்ட் பிராட் நேற்று தனது 300வது விக்கெட்டை வீழ்த்தினார். 300 மற்றும் அதற்கு மேல் வீழத்திய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் இவர் 5வதாக இணைந்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் (413), இயான் போத்தம் (383), பாப் வில்லிஸ் (325), பிரெட் ட்ரூமேன் (307) ஆகியோர் 300க்கும் மேற்பட்ட விக்கெட்களை இதற்கு முன்பு வீழ்த்தியுள்ளனர்.

10 ரன் கூட எடுக்க முடியலையே
நேற்றைய போட்டியில் முதல் 7 வீரர்களும் 10 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் வீழ்ந்தனர். கேப்டன் கிளார்க் மட்டுமே சரியாக 10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

எக்ஸ்ட்ரா தான் பெஸ்ட்!
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை விட அவர்களுக்குக் கிடைத்த எக்ஸ்ட்ரா ரன்தான் அதிகம். அதாவது 14 எக்ஸ்ட்ரா ரன்கள் கிடைத்தது. ஆஸ்திரேலய வீரர்களில் யாருமே அந்த அளவுக்கு எடுக்கவில்லை.
"மாம்பலம் மாமாஸ் மற்றும் சோமாஸ் கூட"
ஆஸ்திரேலியாவின் இந்த கேலவமான ஸ்கோரை டிவிட்டர், பேஸ்புக்கில் செமையாக கிண்டலடித்து வருகிறார்கள். ஸ்ரீனி மாமா என்ற பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் மாம்பலம் மாமாஸ் மற்றும் சோமாஸ் கூட இதை விட பெரிதாக ஆடுவார்கள் என்று ஆஸ்திரேலியாவை கிண்டலடித்துள்ளனர்.
உண்மையிலேயே ரொம்பக் கேவலம்தான்!


Click it and Unblock the Notifications











