Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 சுழற்பந்துவீச்சாளர்களை இறக்கிய ஆஸி.. முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லை.. IND vs AUS Test series

மெல்போர்ன் : இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

இது ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணிக்கு தான் முக்கிய தொடராக உள்ளது. காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும்

அதற்கு ஆஸ்திரேலிய அணியை குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகளிலாவது இந்திய அணி வீழ்த்த வேண்டும். 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் வெல்ல முடிகிறது என்ற நிலை வந்தால் கூட, மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே இந்திய அணி பைனலுக்கு செல்ல முடியும்.

4 சுழற்பந்துவீச்சாளர்கள்

4 சுழற்பந்துவீச்சாளர்கள்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து கடந்த 2 முறை டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இதனால் அதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய மண்ணில் வெற்றி பெறுவற்காக ஆஸ்திரேலிய அணி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. தற்போது இந்திய மண்ணில் வெற்றி பெறுவதற்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 4 சுழற்பந்தவீச்சாளர்களை அந்த அணி தேர்வு செய்துள்ளது.

ஸ்டார்க் காயம்

ஸ்டார்க் காயம்

நாதன் லயான், ஆஸ்டன் ஏகார், முர்பி மற்றும் ஸ்விப்சன் என்ற அந்த நாட்டில் உள்ள 4 தலைச் சிறந்த ஸ்பின்னர்களை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்துள்ளது. இதே போன்று ஆஸ்திரேலிய அணியின் தலைச் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாக உள்ளது.

அணிக்கு திரும்பினர்

அணிக்கு திரும்பினர்

ஆனால் அந்த அணிக்கு நல்ல விசயமாக ஆல் ரவுண்டர் கேம்ரான் கிரீன், கடந்த சில டெஸ்ட்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்காட் போலாந்த ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளனர். இதே போன்று உள்ளூர் போட்டிகளில் கலக்கி வரும் வேகப்பந்துவீச்சாளர் லான்ஸ் மோரிசும் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போன்று கடந்த சுற்றுப் பயணத்தில் இந்தியா வந்த ரீன்ஷா, பீட்டர் ஹான்ஸ்கோம்ப் ஆகியோருக்கு இம்முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

 ஆஸி அணி விவரம்

ஆஸி அணி விவரம்

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேங், ஸ்மித் , டிராவிஸ் ஹேட், மாட் ரீன்ஷா, பீட்டர் ஹான்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, கேமிரான் கிரீன், ஆஸ்டன் ஏகார், நாதன் லயான், மிட்செல் ஸ்வீப்சன், டார் முர்பி, பாட் கம்மின்ஸ் ( கேப்டன்) , மிட்செல் ஸ்டார்க்( முதல் டெஸ்டில் இல்லை), ஜாஸ் ஹேசல்வுட், ஸ்காட் போலாந்து, லான்ஸ் மோரிஸ்

Story first published: Wednesday, January 11, 2023, 16:53 [IST]
Other articles published on Jan 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+