Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்தா வந்துட்டோம்”.. டி20 கிரிக்கெட்டில் இந்தியா, ஆப்கானிஸ்தான் சாதனையை நெருங்கும் ஆஸ்திரேலியா

டார்வின்: டி20 கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த சாதனையை முறியடித்து, தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த சாதனைகள் பட்டியலில் அவர்கள் இன்னும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளைத் தாண்டி முதல் இடத்திற்கு வர முடியவில்லை. அந்த வகையில் டி20 போட்டிகளில் இந்தியா தனது சாதனையை தக்க வைத்துள்ளது.

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டி20 போட்டிகளில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. சமீபத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டார்வின் நகரில் நடந்த முதல் டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Australia achieves new T20 Winning Streak Record But Still Trails India and Afghanistan

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக தனது 9வது டி20 வெற்றியைப் பதிவு செய்தது. இதுவே, டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் மிக நீண்ட வெற்றிப் பயணமாகும். மேற்கிந்தியத் தீவுகள் அணியை அவர்களின் சொந்த மண்ணில் 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்த கையோடு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் களமிறங்கியது ஆஸ்திரேலியா.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஒரு கட்டத்தில் 75 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, டிம் டேவிட்டின் அதிரடியான 83 ரன்கள் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்டின் சிறப்பான பந்துவீச்சால் வெற்றி பெற்றது.

முன்னணியில் இருக்கும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியா 9 தொடர் வெற்றிகளுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்திருந்தாலும், ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளுக்கான பட்டியலில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் அவர்களை விட முன்னிலையில் உள்ளன. இந்த இரு அணிகளும் தலா 12 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி, 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, வங்கதேசம் போன்ற அணிகளை வீழ்த்தி இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. அதேபோல், இந்திய அணி இரண்டு முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. நவம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலும், மற்றும் டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரையிலும் தலா 12 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

ஒட்டுமொத்த பட்டியலில் உகாண்டா முதலிடம்

சர்வதேச அளவில், முழு உறுப்பினர் மற்றும் அசோசியேட் நாடுகள் அனைத்தையும் கணக்கில் கொண்டால், தொடர்ச்சியாக அதிக டி20 வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையை உகாண்டா வைத்துள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 17 வெற்றிகளைக் குவித்து முதலிடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா தற்போது 9 வெற்றிகளுடன், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தால், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் சாதனையை முறியடிக்க ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, August 11, 2025, 10:41 [IST]
Other articles published on Aug 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+