அடுத்தடுத்து அசரடிக்கும் ஆஸ்திரேலியா.. மீண்டும் வெற்றிப் பாதையில்!
ஹராரே: ஆஸ்திரேலியா அணி இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா,பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையியேயான முத்தரப்பு தொடரின் 3ஆவது ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 229 ரன்களை எடுத்தது.கேப்டன் ஆரோன் பின்ச் மிகச்சிறப்பாக விளையாடி 172 ரன்கள் குவித்தார்.

வெற்றி வெற்றி
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு , தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.ஜிம்பாப்வே அணியினர் தொடக்கத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.ஆனால் டை மற்றும் அகர் சிறப்பாக பந்துவீசி ஜிம்பாப்வே அணியை கட்டுப்படுத்தினர்.சிறப்பாக பந்து வீசிய டை 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

சாதனைகள் 1 என்ன
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பெற்றார்.அவர் 172 ரன்களை குவித்தார்.ஒட்டுமொத்தமாக 20 ஓவர் போட்டிகளில் கெயில் அடித்த 175 ரன்கள் சாதனையாகும்.சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 150+ ரன்களை குவித்த ஒரே வீரர் பின்ச் ஆவார் (இரு முறை )ஒரு போட்டியில் அணியின் மொத்த ரன்களில் அதிகப்படியான பங்களிப்பை அளித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் தனது அணியின் ஸ்கோரில் 75.10% பங்களிப்பை அளித்துள்ளது ஒரு சாதனையாகும்.

இரண்டாவது சாதனை
ஆரோன் பின்ச் மற்றும் ஷார்ட் முதல் விக்கெட்டிற்கு 223 ரன்களை குவித்தனர். சர்வதேச போட்டிகளில் இது ஒரு சாதனையாகும்.ஒட்டுமொத்தமாக 20 ஓவர் போட்டிகளில் விராட் கோஹ்லி - டி வில்லியர்ஸ் குவித்த 229 ரன்கள் சாதனையாகும்.

சாதனை 3
ஆரோன் பின்ச் இந்த போட்டியில் 16 பௌண்டரிகளை அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரிகள் இதுவேயாகும்.

இன்னொரு சாதனை
இந்த போட்டியில் பின்ச் - ஷார்ட் இணை 116 பந்துகளை சந்தித்தது.சர்வதேச போட்டிகளில் இது ஒரு சாதனையாகும்.இந்த போட்டியில் பின்ச் 76 பந்துகளை சந்தித்து 172 ரன்களை குவித்தார்.சர்வதேச போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்த முதல் வீரர் இவராவார்.ஒட்டுமொத்தமாக ஸுபையூர் அஹமத் 77 பந்துகளை சந்தித்துள்ளார் (2014)

கடைசி சாதனை
அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.அந்த அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது.


Click it and Unblock the Notifications