இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. கவுரவ இலக்கை எட்டிய ஆஸி.. சுழற்பந்துவீச்சு ஆடுகளமா? கலக்கிய ஷமி
டெல்லி : இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் என்ற கவுரவமான இலக்கை முதல் இன்னிங்சில் எட்டியது. முதல் டெஸ்டை காட்டிலும், ஆஸ்திரேலியா இந்த டெஸ்டில் கொஞ்சம் முதிர்ச்சியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.
இந்திய அணியில் சூர்யகுமாருக்கு பதில், ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டார். தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே டிஆர்எஸ் உதவியால் காப்பற்றப்பட்டார்.

நல்ல தொடக்கம்
வார்னர் கொஞ்சம் பொறுமையை காத்தார். மறுமுனையில் உஸ்மான் கவாஜா அடித்து விளையாட முற்பட்டார். இதனையடுத்து அஸ்வின் ஓவர் வீச வந்தார். அப்போது ஆட்டமிழக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், இந்திய வீரர்கள் சில கடினமான கட்சை தவறவிட்டனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜாடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 15 ரன்களில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் மாயாஜாலம்
இதனையடுத்து களமிறங்கிய லாபஸ்சேன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விரட்டினார். ஒரு கட்டத்தில் முதல் சேஷனில் ஆஸ்திரலிய அணி 100 ரன்களை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆன்ல் அப்போது தான் அஸ்வின் தனது மேஜிக்கை வெளிகாட்டினார். அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது. முதலில் லாபஸ்சேன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நடுவரிசை ஏமாற்றம்
பெரிதும் எதர்பார்க்கப்பட்ட ஸ்மித் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மதிய நேர இடைவேளையின் போது 94 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டம் மீண்டும் தொடகியதும், டிராவிஸ் ஹேட் 12 ரன்களில் ஷமி பந்தில் பெவிலியன் திரும்பினார். அலெக்ஸ் கரி வந்த வேகத்தில் அஸ்வின் பந்தில் டக் அவுட் ஆனார்.

போராடிய வீரர்கள்
சிறப்பாக ஆடிய கவாஜா 81 ரன்களில் ராகுலின் அபார கேட்சால் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து பிட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் மற்றும் பாட் கம்மின்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. பாட் கம்மின்ஸ் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க,பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியற, ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications