For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

62 ரன்களுக்கு ஆஸி., ஆல் அவுட்.. ஒரே வருடத்தில் அதிக தோல்வி.. அதலபாதாளத்தில் கங்காருக்களின் தேசம்

டாக்கா: ஆஸ்திரேலியாவின் நிலைமை இத்தனை மோசமாகும் என்று எவருமே நகற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் நவம்பர் மாதம் அமீரகத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், பல அணிகள் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகின்றன.

அதன்படி ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்த டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா, டி20 தொடரை மிக மோசமாக தோற்றது.

முதல் வெற்றி

முதல் வெற்றி

இந்த நிலையில், வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அடுத்தடுத்தது தோற்று தொடரை இழந்தது. இந்த சூழலில், கடந்த 7ம் தேதி நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 19 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்த வெற்றி தொடரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், அதிகமாக இப்போட்டி ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை.

தொடக்கப் புள்ளி

தொடக்கப் புள்ளி

எனினும், இந்த போட்டியில் உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படும் ஷகிப் அல் ஹசன் வீசிய ஒரே ஓவரில் 6,6,6,0,6,6 என மொத்தம் 30 ரன்களை அந்த ஓவரில் குவித்தார் டேன் கிறிஸ்டியன். ஆஸ்திரேலியாவும் வெற்றிப் பெற்றது. இப்படி ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசியும், ஆஸ்திரேலியா 19வது ஓவரில் தான் வென்றது. அதுவும் 7 விக்கெட்டுகளை இழந்து. எனினும், ஆஸ்திரேலியா மீண்டும் ஃபார்முக்கு திரும்புவதற்கு இந்த வெற்றி தொடக்க புள்ளியாக இருக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது.

கடைசி டி20 போட்டி

கடைசி டி20 போட்டி

இந்நிலையில், அப்படியொரு நினைப்பே வந்திருக்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு நேற்று மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படுதோல்வி அடைந்திருக்கிறது ஆஸ்திரேலியா. ஆம்!. நேற்று (ஆக.9) இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் மீண்டும் ஜெயித்தால் 2-3 என்ற கௌரவமான தோல்வியுடன் நாடு திரும்பலாம் என்றிருந்தது கங்காருக்களின் தேசம். ஆனால், எல்லாம் நாசமாக போனது தான் மிச்சம்.

4-1 என தோல்வி

4-1 என தோல்வி

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நயீம் 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இது தான் அந்த அணியின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரே. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதற்கு அப்புறம் தான் கூத்தே இருக்கு. 123 எனும் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், கடந்த போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ்டியன் 3 ரன்னில் போல்டாகி வெளியேறினார். அந்த அணியில் இரண்டு பேர் மட்டுமே டபுள் டிஜிட் ஸ்கோரை எட்டினர். அந்த அணியின் 9 வீரர்கள் சிங்கிள் டிஜிட் ஸ்கோர் மட்டுமே எடுத்தனர். ஆம்! ஒரு காலத்தில் உலகையே கிரிக்கெட்டில் கட்டி ஆண்ட ஆஸ்திரேலியா, 13.4வது ஓவரில் வெறும் 62 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. ஷகிப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெறும் 122 ரன்கள் அடித்த வங்கதேசம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

இந்த 62 ரன்கள் என்பது, டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அடித்த மிகக் குறைவான ஸ்கோராகும். இதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக 79 ரன்கள், இந்தியாவுக்கு எதிராக 86 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு முறை 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே, டி20- ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. இப்போது வங்கதேசத்திற்கு எதிராக 62 ரன்கள் எடுத்ததன் மூலம், தனது சாதனையை தானே முறியடித்துள்ளது ஆஸ்திரேலியா.

சாதனை சமன்

சாதனை சமன்

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக ஐந்து முறை டி20 தொடரை இழந்திருக்கிறது. இங்கிலாந்தில் கடந்த 2020ல் நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் 3-2 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக 4-1 என்ற கணக்கிலும் வரிசையாக தொடரை இழந்து நிற்கிறது ஆஸ்திரேலியா. இதுவரை, 2021 ஆம் ஆண்டில் 11 டி20 போட்டிகளில் ஆஸி., அணி தோல்வியடைந்துள்ளது, இது ஒரு வருடத்தில் ஒரு அணியின் நான்காவது அதிகபட்ச தோல்வியாகும். 2016 ல் இலங்கை 13 போட்டிகளிலும், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் 2010 மற்றும் 2019ல் 12 முறையும், வங்கதேசம் 2018ல் 11 போட்டிகளிலும் தோற்றிருந்தது. இப்போது ஆஸ்திரேலியா அந்த சாதனையை சமன் செய்திருக்கிறது.

Story first published: Tuesday, August 10, 2021, 11:29 [IST]
Other articles published on Aug 10, 2021
English summary
australia all out 62 runs against bangladesh - ஆஸ்திரேலியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+