Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு கடும் சவால்.. ODI தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. கம்பேக் தரும் ஐபிஎல் ஸ்டார்கள்

மும்பை: இந்திய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக 16 பலமான வீரர்கள் கொண்ட படையை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இந்த முறை தரமான சம்பவங்களை ரசிகர்கள் பார்க்கலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.

எனவே இனி வரக்கூடிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலிய அணியும், ஒயிட் வாஷ் செய்து அனுப்ப வேண்டும் என இந்திய அணியும் கடும் முனைப்புடன் பயிற்சி செய்து வருகிறது.

50 ஓவர் கிரிக்கெட்

50 ஓவர் கிரிக்கெட்

இந்நிலையில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பக்கம் திரும்பியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 13ம் தேதியன்று முடிவடைகிறது. இதன் பின்னர் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 17ம் தேதி முதல் தொடங்கிவிடும். இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சூழலில், ஆஸ்திரேலியா தற்போது அறிவித்துள்ளது.

வலுவான படை

வலுவான படை

பேட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் அதிரடி ஆல்ரவுண்டர்கள் க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளனர். காலில் காயம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக விளையாடாமல் உள்ள மேக்ஸ்வெல் ஃபுல் ஃபார்முடன் திரும்ப வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்காக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் மிட்செல் மார்ஷ் . இவர்களுடன் சேர்ந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சனும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி சொந்த நாட்டிற்கு சென்றுள்ள டேவிட் வார்னர், ஆஷ்டன் ஆகர் போன்றோரும் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு வரவுள்ளனர். கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் சாம்பா உள்ளிட்ட ஸ்டார் வீரர்களும் இந்தியாவில் நன்கு விளையாடுவார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளதால் இந்த தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய படை

ஆஸ்திரேலிய படை

பேட் கம்மின்ஸ், சீன் அப்போட், ஆஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், மார்னஸ் லபுசாக்னே, மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஜேயி ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் சாம்பா

Story first published: Thursday, February 23, 2023, 13:11 [IST]
Other articles published on Feb 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+