Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்மித்,லாபுசாக்னேவிற்கு எதிரா இந்தியா சூப்பர் பிளான் பண்ணியிருக்காங்க.. இத முறியடிங்க.. கோச் அறிவுரை

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் லாபுசாக்னே இருவரும் சிறப்பான ஆட்டத்தை தரத் தவறியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் திட்டங்களை சமாளித்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே இருவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அந்த அணியின் துணை கோச் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் அறிவுறுத்தியுள்ளார்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

சொதப்பலான ஆட்டம்

சொதப்பலான ஆட்டம்

இந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபுசாக்னே இருவரும் சொதப்பலான ஆட்டங்களையே தந்துள்ளனர். அஸ்வின், பும்ரா உள்ளிட்ட இந்திய பௌலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியுள்ளனர்.

முறியடிக்க வேண்டும்

முறியடிக்க வேண்டும்

இந்நிலையில், இந்திய பௌலர்களின் திட்டங்களை முறியடித்து அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை அடுத்ததாக விளையாடவுள்ள 3வது மற்றும் 4வது போட்டிகளில் அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கோச் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் அறிவுறுத்தியுள்ளார்.

துணை கோச் நம்பிக்கை

துணை கோச் நம்பிக்கை

இந்த இரு வீரர்களையும் கட்டுப்படுத்த இந்தியா சிறப்பான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டாலும் ஸ்மித் மற்றும் லாபுசாக்னே இருவரும் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவத்துள்ளார்.

Story first published: Friday, January 1, 2021, 11:08 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+