இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட்.. ஆஸி. முதலில் பேட்டிங்.. காயத்தால் கோஹ்லி விலகல்
தரம்சாலா: தொடரின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்கியது. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
18 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்திருந்தது. மேட் ரென்ஷா 1 ரன்னில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் அவுட்டானார். டேவிட் வார்னர் 27 ரன்களுடனும், கேப்டன் ஸ்மித் 47 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

பகலிலேயே 20 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான் நிலவும் தரம்சாலா பேட்டிங்கின் சொர்க்கபுரியாக காட்சியளிக்கிறது. இந்த வானிலைக்கும், பிட்சுக்கும் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.
இதனிடையே காயம் காரணமாக இந்திய அணியில் விராட் கோஹ்லி இடம்பெறவில்லை. இந்திய அணிக்கு ரஹானே கேப்டன் பொறுப்பையேற்றுள்ளார். கருண் நாயகர், குல்தீப் யாதவ், புவனேஸ்வர்குமார் அணியில் இடம் பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications