Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னரின் மனைவிக்கு பெண் குழந்தை.. இந்திய அணியின் விஜயத்தின் போது பிறந்ததால் பெயர் "இன்டி ரே"!

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் மனை்வி கேண்டிஸுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களுக்கு 2வது குழந்தையாகும். இன்ஸ்டாகிராம் மூலம் தான் மீண்டும் தந்தையாகியுள்ள செய்தியை சந்தோஷத்துடன் பகிர்ந்துள்ளார் வார்னர்.

இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திற்கு இடையே வார்னரின் குழந்தை பிறந்துள்ளது. இதனாலோ என்னவோ தனது மகளுக்கு இன்டி ரே என்று பெயர் சூட்டியுள்ளார் வார்னர்.

தனது 2வது மகளின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் வார்னர். வார்னர் - கேண்டிஸ் தம்பதிக்கு ஏற்கனவே 16 மாதமேயான இவி மே என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Australia batsman David Warner blessed with a baby girl

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வார்னர் கூறுகையில், கேண்டியும், நானும் எங்களது அழகிய குட்டி இன்டி ரேயை இன்று காலை வரவேற்றோம். இன்டி ரேயின் தாயார் நன்றாக இருக்கிறார்.. பெருமைக்குரிய தந்தையாக உணர்கிறேன் என்று போட்டுள்ளார் வார்னர்.

இன்னொரு போஸ்ட்டில், முதல் முறையாக தனது குட்டித் தங்கையை சந்தித்தாள் இவி மே. பெரிய முத்தமும் கொடுத்தாள் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார் வார்னர். நாளை நடைபெறவுள்ள 2வது போட்டியில், மனைவிக்குப் பிரசவம் காரணமாக அவர் ஆடவில்லை. அவருக்குப் பதில் உஸ்மான் காஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Thursday, January 14, 2016, 15:33 [IST]
Other articles published on Jan 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+