Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை டி20: முக்கிய ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

பெங்களூரு: உலக கோப்பை டி20 தொடரின் 'சூப்பர் 10' சுற்றின் 10-வது 'லீக்' ஆட்டத்தில் வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பதிவு செய்தது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடைப்பெற்ற லீக் போட்டியில் 'குரூப் 2' பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

Australia beat Bangladesh by three wickets

அதன்படி களம் இறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்க ஆட்டகாரர் சௌமிய சர்கார் 2 ரன்களில் வாட்சன் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முகமது மிதுன் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வங்கதேச அணியினர் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கடைசியில் களமிறங்கிய மஹ்மதுல்லா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 21 ரன்களில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டகாரர் உஸ்மான் கவாஜா அதிரடியாக 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் சுமித் 14 ரன்கள், வார்னர் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மேக்ஸ்வெல் அதிரடி காட்ட ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை நெருங்கியது. இருப்பினும் வங்கதேசத்தின் பந்து வீ்ச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர். ஒரு கட்டத்தில் அல் ஹாசன் வீசிய 17 ஓவரில் மேக்ஸ்வேல் 26 ரன்னிலும், ஹாஸ்டிங்ஸ் 3 ரன்னிலும் ஆவுட்டாக ஆட்டத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ஆல்ரவுண்டர் பால்க்னர் 18 வது ஓவரில் 3 பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அல் ஹாசன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஷாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 8 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது. இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Monday, March 21, 2016, 23:40 [IST]
Other articles published on Mar 21, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+