For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தான் டா உண்மையான ஆஸ்திரேலியா! சரியான நேரத்தில் ஃபார்ம்க்கு வந்த ஆஸி.. இந்தியா படுதோல்வி

ராஜ்காட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகள் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் தற்போது வெற்றி பெற்று இருக்கிறது.

இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு தற்போது ஆஸ்திரேலிய அணி பழி தீர்த்துக் கொண்டது. ராஜ்காட் மைதானத்தில் இதுவரை முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது என்ற ரெக்கார்டும் தற்போது தொடர்ந்து வருகிறது.

Australia beat india by 66 runs in 3rd odi and avoids whitewash

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று கடந்த இரண்டு போட்டிகளில் தடுமாறிய மிச்சல் மார்ஸ் இன்றைய ஆட்டத்தில் 84 பந்துகளை எதிர்கொண்டு 94 ரன்களை விளாசி நான்கு ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

தன் பங்கிற்கு 74 ரன்கள் 72 ரன்களும் எடுக்க பின்வரிசை வீரர்கள் தடுமாறினர். எனினும் ஆஸ்திரேலிய அணி ஐம்பது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடியது. தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அவர் 30 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதை அடுத்து ரோகித், விராட் கோலி ஜோடி இணைந்து அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 57 பந்துகளை எதிர்கொண்டு 82 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் ஆறு சிக்ஸரும் அடங்கும்.

பேட்டிங் வரிசையில் தன்னுடைய இடத்தில் விளையாடிய விராட் கோலி அரை சதம் கடந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஜோடி இந்திய அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் 26 ரன்களில் வெளியேற இந்திய அணியின் சரிவு தொடங்கியது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார், இன்றைய ஆட்டத்தில் வெறும் 8 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

இதேபோன்று ஸ்ரேயாஸ் 43 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்கள் சேர்த்தார். ஜடேஜா இறுதிய 35 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 49.4 ஓவர் முடிவில் 286 ரன்களில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்தது ஆஸ்திரேலிய தரப்பில் மேக்ஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். உலகக்கோப்பை தொடர் முன்பு ஆஸ்திரேலியாவை இந்தியா ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சு இருக்கிறது.

Story first published: Wednesday, September 27, 2023, 21:46 [IST]
Other articles published on Sep 27, 2023
English summary
Australia beat india by 66 runs in 3rd odi and avoids whitewash இதுக்கு தான் ஒவரா ஆடக் கூடாது.. அணி தேர்வில் தவறு.. இந்தியாவை வச்சு செய்த ஆஸ்திரேலியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+