Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 3வது தோல்வி.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

மும்பை : இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தததால், இந்திய அணி விக்கெட்டுகள் சரிந்தன.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி முதல் இன்னிங்சில் 197 ரன்கள் சேர்த்தது.

சொதப்பல்

சொதப்பல்

இதனையடுத்து 88 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடியது. ரோகித் சர்மா 12 ரன்களிலும், சுப்மன் கில் 5 ரன்களிலும் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 13 ரன்களிலும், ஜடேஜா 7 ரன்களிலும் வெளியேற, இந்தியா மீண்டும் சரிவை நோக்கி சென்றது.

163 ரன்களுக்கு அவுட்

163 ரன்களுக்கு அவுட்

புஜாராவுடன் இணைந்து ஸ்ரேயாஸ் ஐயர், பார்ட்னர்ஷிப் அமைக்க, ஸ்ரேயாஸ் 26 ரன்களில் வெளியேறினார். அஸ்வின் 16 ரன்களிலும், அக்சர் பட்டேல் 15 ரன்களிலும் வெளியேற, புஜாரா மட்டும் போராடி தனி ஆளாக 59 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 2வது இன்னிங்சில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

76 ரன்கள் இலக்கு

76 ரன்கள் இலக்கு

இதனையடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. மூன்றாம் நாள் தொடக்கத்தின் 2வது பந்திலேயே அஸ்வின் கவாஜாவை டக் அவுட் ஆக்கினார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ஆனால், மார்னஸ் லாபஸ்சேன், டிராவிஸ் ஹேட் ஜோடி ரசிகர்களின் நம்பிக்கையை அழித்தனர்.

ஆஸ்திரேலியா அபாரம்

ஆஸ்திரேலியா அபாரம்

பொறுப்பாக விளையாடிய டிராவிஸ் ஹேட் 49 ரன்களும், மார்னஸ் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் நிற்க ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய நாதன் லயான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சொந்த மண்ணில் தோல்வி அடையும் 3வது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

Story first published: Friday, March 3, 2023, 12:19 [IST]
Other articles published on Mar 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+