Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

17 ஆண்டுகளில் முதல் முறை.. தென்னாப்பிரிக்க அணி படுதோல்வி.. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற ஆஸி

மெல்போர்ன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கிரிக்கெட் உலகின் முக்கிய நாளாக பார்க்கப்படும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி வீரர்களின் துல்லிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

189 ரன்கள்

189 ரன்கள்

தொடக்க வீரர் டீன் எல்கார் 26 ரன்களிலும், சாரேல் எர்வீ 18 ரன்களும், டிபுருன் 12 ரன்களிலும், பெவுமா 1 ரன்களிலும், சோண்டா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் கடுமையாக போராடிய யான்சென், வெர்ரைன் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

திணறிய வீரர்கள்

திணறிய வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர் கேமிரான் கிரீன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. உஸ்மான் கவாஜா 1 ரன்னில் ஆட்டமிழக்க, மார்னஸ் லாபஸ்சேங் 14 ரன்களில ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஸ்மித், வார்னர் ஜோடி இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

சிறப்பாக விளையாடிய ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுணையில் தொடர்ந்த அதிரடியை காட்டிய டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் விளசி அசத்தினார். டிராவிட் ஹேட், கேமிரான் கிரீன் ஆகியோர் அரைசதம் அடிக்க இறுதியில் அலெக்ஸ் கேரி சதம் விளாசினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 575 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

 தொடரை இழந்தது

தொடரை இழந்தது

386 ரன்கள் பின்தங்கிய தென்னாப்பிரிக்க அணி தனது கடைசி இன்னிங்சில் விளையாடியது. இதிலும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். பெவுமா மட்டும் அதிகபட்சமாக 65 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை இழந்தது. கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.

Story first published: Thursday, December 29, 2022, 17:38 [IST]
Other articles published on Dec 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+