Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அபாரம்.. இலங்கையை புரட்டிப் போட்டது.. இன்று 2வது டி20 பதிலடி தருமா இலங்கை

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.கொழும்புவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய நிசாங்கா மற்றும் குனதிலகா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்பிளே முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அசலாங்காவும் நிதானமாக விளையாடினார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 59 ரன்கள் சேர்த்தது. நிசாங்கா 36 ரன்களில் வெளியேறினார். இதனால் 12வது ஓவர் முடிவில் இலங்கை அணி 100 ரன்களை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது.

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

இலங்கை பெரிய ஸ்கோர் அடிக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அதன் பிறகு இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஹேசல்வுட் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக ஹேசல்வுட் வீசிய 14வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறியது. 100 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி அடுத்த 28 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களில் சுருண்டது.

ஆஸ்திரேலியா அபாரம்

ஆஸ்திரேலியா அபாரம்

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர். இதனால் 14வது ஓவர் முடிவிலேயே விக்கெட் இழப்பின்றி இந்த ஜோடி வெற்றி இலக்கை எட்டியது.

இன்று 2வது டி20

இன்று 2வது டி20

ஆரோன் பிஞ்ச் 61 ரன்களும், வார்னர் 70 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி கொழும்புவில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சொதப்பிய இலங்கை வீரர்கள் இன்று பதிலடி தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குசேல் மெண்டிஸ், ராஜபக்சே, அசலாங்கா ஆகியோர் அதிரடியைக விளையாடினால் மட்டுமே இன்றைய ஆட்டத்தில் இலங்கையால் பதிலடி தர முடியும்.

Story first published: Wednesday, June 8, 2022, 17:41 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+